தமிழ்நாடு

கல்வியில் சிறந்த தமிழ்நாடு : பள்ளி - உயர் கல்விக்கு கடந்த ஆண்டை விட கூடுதல் நிதி ஒதுக்கீடு!

இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு : பள்ளி - உயர் கல்விக்கு கடந்த ஆண்டை விட கூடுதல் நிதி ஒதுக்கீடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து பிப். 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்கள் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதையடுத்து இன்று 2024-25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:-

பள்ளி கல்வி:

தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். இதன் மூலம் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள்.

பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பள்ளிக் கட்டமைப்பு வதிகள் மேற்கொள்ளப்படும்.

28 பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக ரூ.100 கோடியில் தரம் உயர்த்தப்படும்.

15000 திறன்மிகு வகுப்பறைகள் ரூ.300 கோயில் உருவாக்கப்படும்.

இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பொது நூலகங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட ரூ.213 கோடியில் சிறப்பு திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். பள்ளி கல்வித்துறைக்கு ரூ.44,042 கோடி நிதி ஒதுக்குடு செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வி :

அரசு பொறியியல் கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் கட்டமைப்பு பணிகள் ரூ.200 கோடியில் செயல்படுத்தப்படும்.

236 அரசு கல்வி நிறுவனங்களுக்கு கணினி மற்றும் இதர அறிவியல் கருவிகள் ரூ.173 கோடியில் வழங்கப்படும்.

42 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளை தொழில்துறை 4.0 தரத்திற்க உயர்த்திட ரூ.3014 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

7.5% உள் ஒதுக்கீடு திட்டதிதில் இந்த நிதியாண்டும் 28,749 மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும். இதற்கு ரூ.511 கோடி ஒதுக்கீடு.

இளைய தலைமுறையினர் அறிவுத் தாகத்தை மேலும் தூண்டும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் கோயம்புத்தூரில் அமைக்கப்படும். உயர்கல்வித்துறைக்கு ரூ.8,212 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்விக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ரூ. 3743 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு. (2023-24 பட்ஜெட்: ரூ.40,299 கோடி, 2024-25 பட்ஜெட்: ரூ.44,042 கோடி) உயர்கல்வித்துறைக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ரூ.1,245 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு. (2023-24 பட்ஜெட்: ரூ6,967 கோடி 2024-25 பட்ஜெட்: ரூ.8,212 கோடி)

banner

Related Stories

Related Stories