தமிழ்நாடு

“திமுக வேட்பாளர்களை எதிர்த்து நிற்கும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள்” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!

திமுக வேட்பாளர்களை எதிர்த்து நிற்கும் அனைவரும் டெபாசிட் இழக்க செய்யும் அளவிற்கு செயல்பாடு இருக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

“திமுக வேட்பாளர்களை எதிர்த்து நிற்கும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள்” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த பத்தாண்டு காலத்தில் ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாட்டிற்கு இழைத்த அநீதிகளையும், ஒன்றிய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து தற்பொழுது நாடகமாடும் அடிமை அதிமுகவின் துரோகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதி வாரியான கூட்டங்கள் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி, "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், “வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி மட்டுமல்ல திமுக வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் அனைவரையும் டெபாசிட் இழக்க செய்யும் அளவிற்கு செயல்பாடு இருக்கும்.

கார்ப்பரேட்டுகளின் அரசாகவே பாஜக அரசு செயல்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டில் 33 சதவீதமாக இருந்த கார்ப்ரேட்டுகளின் வரி வசூல், தற்பொழுது 22 சதவீதமாக குறைந்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பொன். கௌதம சிகாமணி, மகளிர் அணி துணைச் செயலாளர் அங்கையர்கண்ணி, மாநில விவசாய அணி துணை செயலாளர் தங்க.சித்தார்த்தன். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் அனைத்து சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் தொகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories