தமிழ்நாடு

“ஒன்றிய ஆட்சியை மாற்றி அமைக்கும் சக்தி திமுகவுக்கு உண்டு” - பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்த கோவி.செழியன்!

திமுக மற்றும் இந்திய கூட்டணியை கண்டு ஒன்றிய பாஜக அரசு பயப்படுகிறது. மத்திய ஆட்சியை மாற்றி அமைக்கும் சக்தி திமுகவுக்கு உண்டு என அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

“ஒன்றிய ஆட்சியை மாற்றி அமைக்கும் சக்தி திமுகவுக்கு உண்டு” - பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்த கோவி.செழியன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த பத்தாண்டு காலத்தில் ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாட்டிற்கு இழைத்த அநீதிகளையும், ஒன்றிய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து தற்பொழுது நாடகமாடும் அடிமை அதிமுகவின் துரோகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதி வாரியான கூட்டங்கள் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில், திமுக சார்பில் “உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்” பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. நடைபெற்ற இந்த கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசியது: “அனைவரும் நமது சாதனையை சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும். மகளிருக்கு அதிகப்படியான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்.

உலகத்திலேயே யாரும் கொடுக்காத ஒரு திட்டம் மகளிருக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான். வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு என்பது உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தினருக்கும் இட ஒதுக்கீடுகளை பெற்றுக் கொடுத்தது திமுக. போகிற போக்கில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை எடப்பாடி தருவதாக அறிவித்து சென்றார்.

ஏற்கனவே 20 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைபடுத்தப்பட்ட நிலையில் இவர்கள் என்ன ஒதுக்கீடு தருகிறார்கள். திமுக தலைமை யாரை சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கிறதோ அவரை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

“ஒன்றிய ஆட்சியை மாற்றி அமைக்கும் சக்தி திமுகவுக்கு உண்டு” - பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்த கோவி.செழியன்!

கழக மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவரும், அரசு தலைமைக் கொறடாவுமான கோவி.செழியன் பேசியது: “பாஜகவுக்கு மாற்று திமுக கூட்டணி என்பதை அனைவரும் உணர வேண்டும். இதற்கு ஒன்றிய அரசு பயப்படுகிறது. மத்திய ஆட்சியை மாற்றி அமைக்கும் சக்தி மாநில கட்சிக்கு உண்டு என்றால் அது திமுகவுக்கு உண்டு. அன்று இந்திராகாந்தி பிரதமர் யார் என திமுக தலைவர் கலைஞர் சொல்வார் என்று சொன்னாா்.

அண்ணா 1965-ல் சொன்னது வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்று. ஆனால் இன்று வடக்கு வாழ்கிறது. தெற்கு வாழவைக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்சொல்வது உண்மை. இந்தியாவின் தலைநகர் என்பதை சென்னை என சொல்லும் அளவுக்கு மாற்றி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி இன்றளவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்தை எதிர்பார்த்து உள்ளார்.

மாநில உரிமையை, கல்வி உரிமையை, வேலைவாய்ப்பு உரிமையை பெறவே இந்த போராட்டம். தமிழகத்தில் தொடங்கியுள்ள இந்த பிரச்சார ஒலி டெல்லி வரை சென்று நிற்கும். கடந்த 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போது, கள்ளப்பணத்தை கண்டுபிடிப்பேன். கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வருவேன் என்றார் மோடி.

இதுவரை எந்த செயல்பாடும் இல்லை. தனது ஆட்சியில் ரூ.500 செல்லாது என்று அப்போதும், ரூ.2000 செல்லாது என்று தற்போதும் அறிவிப்புகளை செய்தது தான் சாதனை. முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் இருந்தபோது தான் மாநில உரிமைகளை மத்திய அரசிடமிருந்து வென்றெடுத்தார். தற்போது சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் இரண்டு பெரும் அமைச்சர்கள் உள்ளனர். நிச்சயம் இந்த தொகுதியை திமுக வெல்லும். தற்போது கடைகளில் ரூ.100 - க்கு சாப்பிட்டால் ரூ.18 மத்திய அரசுக்கு செலுத்த வேண்டியுள்ளது. மனிதர் மத்தியில் ஏற்றத்தாழ்வு கிடையாது என இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சொன்னால், அவரது தலையை கொண்டு வாருங்கள் ரூ.10 கோடி தருகிறேன் என்கிறார் ஒருவர்.

“ஒன்றிய ஆட்சியை மாற்றி அமைக்கும் சக்தி திமுகவுக்கு உண்டு” - பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்த கோவி.செழியன்!

வெள்ளபாதிப்புக்கு தொகை கேட்டால், ஏடிஎம் மிசினா வைத்துள்ளோம் என சொன்னது நிர்மலா சீதாராமன். ஆனால், உதயநிதி கூறியதாக குற்றம் சாட்டுகின்றனர். இ.டி.வந்தாலும், மோடி வந்தாலும் அதனை எதிர்க்க தயாராக உள்ளோம். இந்தியாவில் 90 சதவீதம் இந்துக்கள் வாழ்கிறது என வைத்துக்கொண்டாலும், அவர்களுக்கான சலுகைகளை பெற்றுக்கொடுத்தது கலைஞர் என்பதை அனைவரும் எண்ணி பார்க்க வேண்டும். எத்தனை எத்தனையோ போராட்டங்களை நடத்தி இட ஒதுக்கீடுகளை பெற்றவர் கலைஞர்.

மொழிக்காக உயிர்நீத்த தியாகிகளுக்கு, இட ஒதுக்கீட்டில் உயிர்நீத்த தியாகிகளுக்கும் மாதாந்திர உதவித்தொகையை கட்சி பாகுபாடின்றி வழங்கியவர் கலைஞர். கடவுளை கும்பிட்டுக் கொண்டு கலைஞரின் கட்சிக்கு வாக்களிப்பவர்கள் அதிகம். விபூதி, ராமகட்டிக்கு வரி ரத்து செய்த கலைஞரா இந்துக்களுக்கு எதிரி. நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்தபோது ஜனாதிபதியை அழைக்காதது ஏன். ஆனால், சென்னையில் கலைஞர் நூற்றாண்டு விழா மருத்துவமனையை திறக்க ஜனாதிபதியை அழைத்தவர் தலைவர் மு.க.ஸ்டாலின்.

அகில இந்தியாவில் மோடி ராஜாவாக இருக்கலாம். ஆனால், தமிழகத்தில் கூஜா தான். கள்ள உறவு கொண்டு வருபவர் எடப்பாடி பழனிசாமி. எனவே, அதிமுகவை நம்பாதீர்கள். இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் இருந்தாலும், மத்திய அரசு கொண்டு வந்த ஒரேநாடு, ஒரே தேர்தல் என்பதை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். 2 பிரதமர்களை உருவாக்கிய காமராஜ் கிங் மேக்கர் என்றால், 6 பிரதமர்களை உருவாக்கிய கலைஞர் சூப்பர் கிங் மேக்கர் ஆவார்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories