தமிழ்நாடு

“ஹிட்லர் கையாண்ட அடக்கு... எதிர்வினை உண்டாகும்” : மோடி அரசுக்கு முத்தரசன் கடும் எச்சரிக்கை !

ஹிட்லர் கையாண்ட அடக்கு முறையை போலவே ஒன்றிய அரசும் விவசாயிகளிடம் அடக்கு முறையை கையாண்டு வருகிறது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

“ஹிட்லர் கையாண்ட அடக்கு... எதிர்வினை உண்டாகும்” : மோடி அரசுக்கு முத்தரசன் கடும் எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை தியாகராய நகர் பாலன் இல்லத்தில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் டெல்லியில் போராட்டம் நடத்தி வரக்கூடிய விவசாயிகள் மீது ஒன்றிய அரசு கையாளும் அடக்குமுறை நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது முத்தரசன் கூறுகையில், “டெல்லியில் ஒன்றிய பாஜக அரசு தனது மிருக பலத்தை பயன்படுத்தி விவசாயிகளுக்கு எதிராக மூன்று சட்ட திருத்தத்தை நிறைவேற்றியது. இதற்காக பதினைந்து மாதங்கள் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு 200 பேர் உயிர் மாத்த பின்பு ஒன்றிய அரசு அந்த மூன்று சட்டங்களையும் திரும்பிப் பெறுவதாக கூறி, மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வதற்காகவும், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை ஏற்றுக் கொள்வதாகவும் கூறி ஒப்புதல் அளித்தது.

ஆனால் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தும் பல மாதங்கள் கடந்து சென்ற பின்பும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தினால், ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், அரியானா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்துவதற்காக டெல்லி நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.

“ஹிட்லர் கையாண்ட அடக்கு... எதிர்வினை உண்டாகும்” : மோடி அரசுக்கு முத்தரசன் கடும் எச்சரிக்கை !

விவசாயிகள் மீது தண்ணீர் பிச்சை எடுத்து தடுப்புகள் அமைத்தும் அவர்கள் டெல்லிக்குள் நுழைவதை தடுப்பதற்காக சாலைகளின் நடுவே பள்ளங்களை வெட்டியும், தடியடி நடத்தியும் அடக்கு முறையை ஒன்றிய அரசு மீண்டும் கையாண்டு வருகிறது. இது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு செயல். அடக்குமுறையால் போராட்டத்திற்கு முடிவு கட்டிவிடலாம் என்று ஒன்றிய அரசு நினைப்பது எதிர்வினை மட்டுமே உண்டாக்கும்.

ஹிட்லர் கையாண்ட அடக்கு முறையை போலவே ஒன்றிய அரசும் விவசாயிகளிடம் அடக்கு முறையை கையாண்டு வருகிறது. இந்த அடக்குமுறைக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பல அரசியல் கட்சி தலைவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவளித்து வருகிறார்கள். இந்த வகையில் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் தேவைப்பட்டால் போராட்டம் நடத்த தயாராக உள்ளோம்.

ஒன்றிய அரசு இந்தியாவில் உள்ள முக்கிய தொழிலாதிபர்கள் வளர்ச்சி அடைவதற்காக பல்வேறு வரி குறைப்புகளை செய்து பல வரிகளை உயர்த்தி உள்ளது. ஆனால் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறி இதனால் வரையும் அவர்கள் இது கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் அடக்கு முறையை கையாள்வது மிகவும் கண்டனத்திற்குரியது.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories