தமிழ்நாடு

“ஸ்பெயின் பயணத்தில் ரூ.3,440 கோடி முதலீடு ஈர்ப்பு : முதல்வருக்கு வாழ்த்துகள்” - CPI முத்தரசன் பேட்டி !

“ஸ்பெயின் பயணத்தில் ரூ.3,440 கோடி முதலீடு ஈர்ப்பு : முதல்வருக்கு வாழ்த்துகள்” - CPI முத்தரசன் பேட்டி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு முதலமைச்சரின் ஸ்பெயின் பயணம் வெற்றி பெற்று, ரூ.3,440 கோடி அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் பேட்டியளித்துள்ளார். அவர் அளித்த பேட்டி பின்வருமாறு :

“தமிழ்நாடு முதலமைச்சரின் ஸ்பெயின் பயணத்தில் ரூ.3,440 கோடி மதிப்பீட்டில் தொழில் முதலீட்டை ஈரத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சிக்கு அளிக்கிறது. அவரின் பயணம் வெறும் சுற்றுலா பயணமல்ல, தமிழ்நாடு வளர்ச்சி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இந்த பயணத்தை மேற்கொண்டார். மிக வெற்றிகரமாக தனது பயணத்தை முடித்து, முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாடு திரும்பிய முதலமைச்சருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுவின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.

“ஸ்பெயின் பயணத்தில் ரூ.3,440 கோடி முதலீடு ஈர்ப்பு : முதல்வருக்கு வாழ்த்துகள்” - CPI முத்தரசன் பேட்டி !

2014 ஆம் ஆண்டு பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார், அப்போது அவர் நான் பிரதமரானால் ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருவோம் என தெரிவித்தார். அவர்கள் ஆட்சி வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை 20 கோடி பேருக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி இருக்கவேண்டும். இதுவரை ஒருவருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவில்லை. மாறாக வேலையில் இருந்தவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

தமிழ்நாடு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் மாபெரும் அளவில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. அதில் பல தொழில் நிறுவனத்தினர் அரசுடன் ஒப்பந்தம் செய்தனர். தமிழ்நாட்டில் தொழில் தொடங்க என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை எடுத்துரைத்து, தற்போது ஸ்பெயின் நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களை ஈரத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மேலும் அதிகரிக்கும். இதற்காக இளைஞர்கள், CPI சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

banner

Related Stories

Related Stories