தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி இளைஞரை வங்கி அதிகாரியாக மாற்றிய கலைஞர் நூற்றாண்டு நூலகம் : நெகிழ்ச்சி சம்பவம்!

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் படித்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஸ்ரீகாந்த் என்பவர் வங்கித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளார்.

மாற்றுத்திறனாளி இளைஞரை வங்கி அதிகாரியாக மாற்றிய கலைஞர் நூற்றாண்டு நூலகம் : நெகிழ்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை - புதுநத்தம் சாலையில் ரூ.120.75 கோடியில் உலகத் தரத்துக்கு இணையாக ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’. கட்டப்பட்டுள்ளது. 2,13,338 சதுரடி பரப்பளவில் இந்நூலகம் அமையப்பெற்றுள்ளது. இந்நூலகத்தில் சுமார் 2 லட்சத்திற்கு அதிகமான புத்தகங்கள் இடம்பெறுகின்றன.

மேலும் 6 தளங்களைக் கொண்டுள்ள இந்நூலகத்தின் அடித்தளத்தில் (19314 சதுரடி ) வாகன நிறுத்துமிடம், செய்தி, நாளிதழ் சேமிப்பு, நூல் கட்டும் பிரிவு அமைக்கிறது. தரைத் தள பகுதியில் (32656) கலைக்கூடம், மாற்றுத்திறனாளி பிரிவு, மாநாட்டுக் கூடம், முக்கிய பிரமுகர்கள் அறை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு-1, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கை பிரிவு, மின் கட்டுப்பாட்டு அறை, தபால் பிரிவுகள் இடம் பெற்றுள்ளன.

இந்த நூலகத்தின் 4வது தளத்தில் சுமார் 30 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய போட்டித் தேர்வர்களுக்கான பல்வேறு துறை சார்ந்த நூல்கள் பிரிவு அமைக்கிறது. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று பிரத்யேக பிரிவில் 6000 பிரெய்லி புத்தகங்கள் மற்றும் ஆடியோ புத்தகங்கள் உள்ளன.

மாற்றுத்திறனாளி இளைஞரை வங்கி அதிகாரியாக மாற்றிய கலைஞர் நூற்றாண்டு நூலகம் : நெகிழ்ச்சி சம்பவம்!

இந்நிலையில் போட்டித் தேர்வுக்கு தயாராகி வந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஸ்ரீகாந்த் என்பவர் 4 மாதங்களுக்கு முன்பு கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்குச் சென்று போட்டி தேர்வுக்காக அங்கிருந்த புத்தகங்களை எடுத்துப் பயன்படுத்தி வந்துள்ளார்.

இவரின் இந்த முயற்சிக்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. டி.என்.பி.எஸ்.சியில் வங்கி தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எழுதியுள்ளார்.இந்நிலையில் தனியார் வங்கி நடத்திய போட்டி தேர்வில் வெற்றி பெற்று ஸ்ரீகாந்த் உதவி மேலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்துக் கூறிய ஸ்ரீகாந்த், "கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பிரிவில் என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் படித்து போட்டி தேர்வுகளில் வெற்றி பெற முடியும்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு நூலகம் இளைஞர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்றும் ஒளி விளக்காக அமைந்துள்ளது என்பது ஸ்ரீகாந்த் மூலம் உறுதியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories