தமிழ்நாடு

தொப்பூர் இரட்டைப்பாலத்தில் நிகழ்ந்த சாலை விபத்து : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

தருமபுரி தொப்பூர் இரட்டைப்பாலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொப்பூர் இரட்டைப்பாலத்தில் நிகழ்ந்த சாலை விபத்து : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப்பாலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இது தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம் உள்வட்டம், தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகில் 24-1-2025 மாலை 5.15 மணியளவில் 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சாலை விபத்தில் கோயம்புத்தூர், டவுன்ஹால், அசோக் நகரைக் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சு (56), விமல் ( 28), அனுஷ்கா (23), ஜெனிபர் ( 29) ஆகிய 4 நபர்கள் உயிரிழந்தனர்.

இவ்விபத்தில் 8 நபர்கள் காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 இலட்சம் , காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories