தமிழ்நாடு

காந்தியின் விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா?: ஆர்.என்.ரவிக்கு பதிலடி கொடுத்த சபாநாயகர் அப்பாவு!

காந்தியை கொச்சைப்படுத்தும் ஆளுநர் பேச்சை ஏற்க முடியாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

காந்தியின் விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா?: ஆர்.என்.ரவிக்கு பதிலடி கொடுத்த  சபாநாயகர் அப்பாவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"இந்திய நாடே ஏற்றுக் கொண்ட மகாத்மா காந்தியின் போராட்டத்தையும், தியாகத்தையும் ஆளுநர் ஆர்.என்.ரவி கொச்சைப்படுத்தும் விதமாக பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது அது கண்டிக்கத்தக்கது" என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து நெல்லையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சபாநாயகர் அப்பாவு, " விடுதலைப் போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தவர் தான் சவாக்கர். இவரை தலைவராக ஏற்றுக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தத்தை பின்பற்றக்கூடியவராக இருக்கிறார் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி.

இவர் தொடர்ந்து இந்திய அரசியல் அமைப்பின் சட்டத்திற்கு எதிராகவே நடந்து கொண்டு வருகிறார். தற்போது இந்திய நாடே ஏற்றுக் கொண்ட மகாத்மா காந்தியின் போராட்டத்தையும், தியாகத்தையும் ஆளுநர் ஆர்.என்.ரவி கொச்சைப்படுத்தும் விதமாக பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது அது கண்டிக்கத்தக்கது.

காந்தி மிகப்பெரிய ராமர் பக்தர். மேலும் பகவத் கீதையின் படி நடந்து கொள்ளக்கூடியவர். இப்படி ராமர் பக்தராக இருந்த காந்தியை சுட்டுக் கொன்றவர்கள்தான் இந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தினர். இவர்கள் வழியில் வந்ததால்தான் இன்று காந்தியை கொச்சைப்படுத்தி ஆளுநர் பேசி இருக்கிறார். எனவே தான் இருக்கும் பதவி என்னவென்று உணர்ந்து அரசியல் அமைப்புச் சட்டப்படி ஆளுநர் நடந்துகொள்ள வேண்டும்." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories