தமிழ்நாடு

இந்தியாவிலேயே முதல் முறை... “மகுடம் சூடப்போகும் பன்னாட்டு மருத்துவ மாநாடு” - அமைச்சர் மா.சு நெகிழ்ச்சி !

சென்னை வர்த்தக மையத்தில் நாளை கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு தொடங்கப்பட உள்ளதாக மா‌.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.

இந்தியாவிலேயே முதல் முறை... 
“மகுடம் சூடப்போகும் பன்னாட்டு மருத்துவ மாநாடு” - அமைச்சர் மா.சு நெகிழ்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகளுக்கான மரபியல் நோய் தடுப்பு மற்றும் ஆலோசனை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பரமணியன், நாளை தொடங்கவிருக்கும் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு தமிழ்நாட்டு மருத்துவத்துறைக்கு மிகப்பெரிய மகுடமாக இருக்கும் என்று கூறினார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, "தமிழ்நாட்டில் குழந்தைகள் இறப்பு விகிதம் கடந்த 2020 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆயிரம் குழந்தைகளுக்கும் 13% என்ற கணக்கில் குழந்தைகள் இறப்பு என்பது இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட குழந்தைகள் நலத் திட்டங்கள் மூலம் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.

1000 குழந்தைகளில் 13% என்ற அளவில் இறந்த குழந்தைகள் எண்ணிக்கை தற்போது, 8.2% என்ற எண்ணிக்கையில் குறைந்துள்ளது. இந்தக் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை மேலும் குறைக்க பல்வேறு புதிய மருத்துவ திட்டங்கள் செயல்பட்டு வருகிறது.

தற்போது எழும்பூர் குழந்தைகள் நல மையத்தில் ஒப்புயர்வு மையம் ரூ.8 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் மரபியல் சார்ந்த மருத்துவமனை ஒப்புயர்வு மையம் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவிலேயே முதல் முறை... 
“மகுடம் சூடப்போகும் பன்னாட்டு மருத்துவ மாநாடு” - அமைச்சர் மா.சு நெகிழ்ச்சி !

அதன்படி இன்று எழும்பூர் நல மருத்துவமனையில் ரூ.2 கோடியே 97 லட்சம் செலவில் ஒப்புரவு மையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதிநவீன பச்சிளம் குழந்தை பராமரிக்கும் பிரிவிற்கு உயிர்காக்கும் உயர் சிகிச்சை உபகரணம் ஒன்று, இங்கு இந்த மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று 27 தாய்ப்பால் வங்கிகளுக்கு ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் 78 உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தாய்ப்பால் வங்கிகளுக்கு தாய்ப்பால் வழங்கும் பெண்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைகளின் நலனில் சிசு இறப்பை குறைக்க, சிறு குழந்தைகளை கண்காணிக்க 2650 கிராம சுகாதார தன்னார்வலர்கள் ஆஷா கிராம சுகாதார தன் ஆர்வலர்களும் 54,439 அங்கன்வாடி பணியாளர்களுக்கும் இன்று ஒரு கையேடு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த திட்டத்தின் கீழ் இரண்டு வயதிற்கு எடை குறைந்து பிறக்கும் குழந்தைகளை தீவிரமாக கண்காணிக்கும் வகையில், சிகிச்சைக்குப் பிறகு, அந்தக் குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த பலன், தற்போது குழந்தை இருக்கும் நிலை குறித்தும் நேரடியாக வீட்டுக்கு சென்று நிலையை மருத்துவரிடம் தெரிவிக்க உத்தரவிடபட்டுள்ளது.

குழந்தையை நேரடியாக வீட்டிற்கு சென்று ஐந்து முறை கண்காணிக்கும் ஆஷா பணியாளருக்கு ஊக்கத்தொகையாக ரூ.250 வழங்கும் திட்டமும் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு 6 திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறை... 
“மகுடம் சூடப்போகும் பன்னாட்டு மருத்துவ மாநாடு” - அமைச்சர் மா.சு நெகிழ்ச்சி !

இந்தியாவிலேயே இதுவரை மாநில அரசு சார்பில் மருத்துவத்திற்கான ஒரு மாநாடு நடத்தப்படவில்லை. மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ், செவிலியர் நலன், மருந்தகம் போன்றவற்றை ஆய்வு செய்வது பல்வேறு நாடுகளில் இருந்து மருத்துவர்கள் வந்து பங்கேற்பது என்ற வகையில் பன்னாட்டு மருத்துவ மாநாடு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு நாளை தொடங்கப்பட உள்ளது.

இந்த மாநாட்டில் 11 ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளார்கள். நாளை நடக்க இருக்கும் இந்த மாநாடு தமிழ்நாட்டு மருத்துவத்துறைக்கு மிகப்பெரிய மகுடமாக இருக்கும். அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து பல்வேறு மருத்துவ நிபுணர்கள் இதில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

இந்தியாவிலும் பல மாநிலங்களில் இருந்து 182 பேச்சாளர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். இதில் 27 அமர்வுகள் நடைபெற இருக்கிறது, ஐந்து குழு விவாதங்களும் இது நடைபெற இருக்கிறது. நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மாநாடு நாளை தொடங்க இருக்கிறது. மக்களும் இதில் கலந்துகொண்டு அவர்களின் கருத்துகளை பகிர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை பொறுத்தவரை கடந்த ஆண்டுகளில் 1500 முதல் 2000 வரை வெளிமாநில குழந்தைகள் இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். தமிழ்நாட்டில் நல்ல முறையில் சிகிச்சை பார்ப்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்" என்றார்.

banner

Related Stories

Related Stories