தமிழ்நாடு

"திமுக இளைஞரணி மாநாட்டில் 4 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பார்கள்” - இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் !

அயோத்தியில் மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதால் அந்த விழாவில் கலந்துகொள்வதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

"திமுக இளைஞரணி மாநாட்டில் 4 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பார்கள்” - இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சேலத்தில் ஜனவரி 21-ஆம் தேதி, மாநில உரிமை மீட்பு முழக்கத்தோடு கழக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது.இந்த மாநாட்டின் நோக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இருசக்கர வாகன பேரணி, மாநாட்டுப் பாடல் வெளியீடு எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை இளைஞர் அணி மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், மாநாட்டுச் சுடர் ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுடர் ஓட்டத்தினை கழக இளைஞர் அணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலையிலிருந்து தொடங்கி வைத்தார்.

மாநாட்டுச் சுடர் தொடர் ஓட்டம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வழியாக மாநாடு நடைபெறும் சேலம் மாவட்டத்தை நாளை மறுநாள் சென்றடைகின்றது.அங்கு கழக இளைஞர் அணிச் செயலாளரும்,அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாநாட்டுச் சுடரை, அன்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கிறார்.

"திமுக இளைஞரணி மாநாட்டில் 4 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பார்கள்” - இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் !

இந்த சுடர் ஓட்டத்தை தொடங்கி வைத்த பின்னர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திமுக இளைஞரணி மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்கு 3 முதல் 4 லட்சம் இளைஞர்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

தற்போது சுடர் ஓட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்த சுடர் ஓட்டம் 310 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபெறும். தொடர் ஓட்டம் சேலத்தை அடைந்ததும் அது இறுதியாக தலைவரிடம் கொடுக்கப்படும். நீட் தேர்வை விலக்க கோரி தற்போதுவரை 85 லட்சம் கையெழுத்துக்களை பெற்றுள்ளோம்.மாநாட்டின் போது அதை திமுக தலைவரிடம் ஒப்படைப்போம், பின்னர் நேரடியாக குடியரசு தலைவரை சந்தித்து அதனை வழங்க இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

அப்போது ராமர் கோவில் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "ராமர் கோயில் திறப்பிற்கோ, அல்லது மத நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை. அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதால், அதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை" என்று கூறினார். மேலும், எடப்பாடி பழனிச்சாமி கால் வலி காரணமாக ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்த கேள்விக்கு, "அவர் தவழ்ந்து தவழ்ந்து போவதால் அவருக்கு அடிக்கடி கால் வலி வருகிறது" என கிண்டல் செய்தார்.

banner

Related Stories

Related Stories