தமிழ்நாடு

திமுக இளைஞரணி மாநாட்டுச்சுடர் ஓட்டம் - பெரியார் சிலையில் இருந்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி !

திமுக இளைஞரணி மாநாட்டுச்சுடர் ஓட்டத்தினை கழக இளைஞர் அணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திமுக இளைஞரணி மாநாட்டுச்சுடர் ஓட்டம் - பெரியார் சிலையில் இருந்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சேலத்தில் ஜனவரி 21-ஆம் தேதி, மாநில உரிமை மீட்பு முழக்கத்தோடு கழக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டின் நோக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இருசக்கர வாகன பேரணி, மாநாட்டுப் பாடல் வெளியீடு எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை இளைஞர் அணி மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், மாநாட்டுச் சுடர் ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுடர் ஓட்டத்தினை கழக இளைஞர் அணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலையிலிருந்து தொடங்கி வைத்தார்

திமுக இளைஞரணி மாநாட்டுச்சுடர் ஓட்டம் - பெரியார் சிலையில் இருந்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி !

எல்.ஐ.சி. சந்திப்பு, ஸ்பென்சர் சந்திப்பு, அண்ணா மேம்பாலம், அறிவாலயம், அன்பகம், சைதாப்பேட்டை, கிண்டி கத்திபாரா, ஆலந்தூர், மீனம்பாக்கம், தாம்பரம் வழியாகச் செல்லும் மாநாட்டுச் சுடர் தொடர் ஓட்டம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வழியாக மாநாடு நடைபெறும் சேலம் மாவட்டத்தை நாளை மறுநாள் சென்றடைகின்றது.

அங்கு கழக இளைஞர் அணிச் செயலாளரும்,அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாநாட்டுச் சுடரை, அன்று கழகத் தலைவரிடம் ஒப்படைக்கிறார்.மாநாட்டுச் சுடர் ஓட்டம் செல்லும் இடங்களில் எல்லாம் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories