முரசொலி தலையங்கம்

உல­கப் பொது­ம­றை­யான திருக்குறளை கபளீகரம் செய்யத் துடிக்கிறது ஆரியக் கும்பல் - முரசொலி விமர்சனம் !

உல­கப் பொது­ம­றை­யான திருக்குறளை கபளீகரம் செய்யத் துடிக்கிறது ஆரியக் கும்பல் - முரசொலி விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (18.1.2024)

குறளும் குதர்க்கவாதிகளும் – -1

வந்த வேலை­யைத் தவிர, மற்ற எல்லா வேலை­க­ளை­யும் பார்க்­கி­றார் ஆளு­நர் ஆர்.என்.ரவி. அவ­ரைச் சுற்றி வளைத்­துக் கொண்டு குளிர் காய்ந்து கொண்­டி­ருக்­கி­றது ஆரி­யக் கும்­பல். அந்­தக் கும்­ப­லி­டம் சிக்கி இருப்­ப­தால் வலிய வந்து வாயைக் கொடுத்து உடம்­பைப் புண்­ணாக்­கிக் கொள்­கி­றார் ஆளு­நர்.

திரு­வள்­ளு­வர் தினத்­தன்று வள்­ளு­வ­ருக்கு காவி உடை அணி­வித்து வாழ்த்­துச் சொல்லி இருக்­கி­றார் ஆளு­நர். அவர் வாழ்த்தை யார் கேட்­டது? வாழ்த்­துச் சொல்­லா­ம­லேயே இருந்­தி­ருக்­க­லாம்.

ஆன்­மிக பூமி­யாம் தமிழ்­நாடு. இவர் வந்­து­தான் அகழ்­வா­ராய்ச்சி செய்து கண்­டு­பி­டித்­தி­ருக்­கி­றார். பார­திய சனா­தன பாரம்­ப­ரி­யத்­தின் பிர­சா­ர­மான துற­வியாம் திரு­வள்­ளு­வர். எப்­போது வந்­தது பார­திய என்ற பெயர்? இவர் சொல்­லும் சனா­த­னச் சக்­கை­யின் பொருள் என்ன? திருச்சி கல்­யா­ண­ரா­மன் சொல்­லிக் கொண்டு இருக்­கி­றாரே அது­தானே? திரி­பு­வாத உள­றல்­க­ளுக்கு அளவு இல்­லையா?

வள்­ளு­வர் வாழ்ந்த காலத்­தில் பார­தம் உண்டா? பார­தி­யம் உண்டா? சனா­த­னச் சழக்­கு­களை அகற்ற வந்­த­வரே வள்­ளு­வர் தானே? சில மாதங்­க­ளுக்கு முன்­பும் திருக்­கு­ற­ளைப் பற்றி இப்­ப­டித்­தான் வாய்க்கு வந்­ததை பேசி­னார் ஆளு­நர். “திருக்­கு­றளை ஜி.யு.போப்­பின் ஆங்­கில மொழி பெயர்ப்­பில் படித்­த­போது அதிர்ச்­சி­யாக இருந்­தது. திரு­வள்­ளு­வர் குறிப்­பிட்ட தமி­ழர்­க­ளின் ஆதி­ப­க­வன் என்­கிற ஆன்­மிக ஞானத்தை சின்னா பின்­ன­மாக்­கும் கால­னித்­துவ நோக்­கத்­து­டன் மொழி­பெ­யர்ப்பு செய்­யப்­பட்­டுள்­ளது. திருக்­கு­ற­ளில் இருந்த ஆன்­மிகத்தை முற்­றி­லு­மாக அகற்றி மொழி­பெ­யர்க்­கப்பட்­டுள்­ளது. ஜி.யு.போப் குறிப்­பிட்ட மதத்­தின் பிரச்­சா­ர­கர் மட்­டு­மல்ல, பிரிட்­டன் நாடா­ளு­மன்­றத்­தின் திட்­டங்­க­ளுக்­காக அனுப்பி வைக்­கப்பட்­ட­வர். அதே சம­யத்­தில் தமிழ் அறி­ஞர்­க­ளால் மொழி­பெ­யர்க்­கப்­பட்ட திருக்­கு­ற­ளைப் படிக்­கும் போது மகிழ்ச்­சி­யுற்­றேன்” - – என்று பேசி­னார். இவ­ருக்கு ஜி.யு.போப்பை கிறித்­து­வ­ரா­கச் சொல்ல வேண்­டும். அதைச் சொல்லி கொச்­சைப்­ப­டுத்த வேண்­டும். அந்த நோக்­கத்­துக்கு திருக்­கு­றளை சிதைத்­தார். ஜி.யு.போப் சிதைத்து விட்­டா­ராம். இவர் தமிழ் அறி­ஞர்­க­ளின் மொழி­பெயர்ப்­பைப் படித்­தா­ராம். யார் மொழி­பெ­யர்த்­த­தைப் படித்­தார் என்­ப­தைச் சொல்லி இருந்­தால் இரண்­டுக்­கு­மான வேறு­பாடு என்ன என்­ப­தைப் பார்க்­க­லாம். அதைச் சொல்­ல­வில்லை ஆளு­நர்.

உல­கப் பொது­ம­றை­யான திருக்குறளை கபளீகரம் செய்யத் துடிக்கிறது ஆரியக் கும்பல் - முரசொலி விமர்சனம் !

உல­கப் பொது­ம­றை­யாக ஆகி­விட்ட திருக்­கு­றள் உல­கின் 200க்கும் மேற்­பட்ட மொழி­க­ளில் மொழி­பெ­யர்க்­கப்­பட்டு விட்­டது. இத­னைக் கப­ளீ­க­ரம் செய்­யத் துடிக்­கி­றது ஆரி­யக் கும்­பல். திருக்­கு­றளை ஞானத்­தின் ஊற்று, நித்­திய ஆன்­மி­கம், ஞானத்­தின் காவி­யம், தர்­மத்­தின் கண், ஆதி­ப­க­வன், பக்தி, ரிக்­வே­தம், உல­கத்தை படைத்­த­வன் ஆதி­ப­க­வன் – -என்று சொல்­வ­தன் மூல­மாக சனா­த­னக் கூட்­டுக்­குள் அடைக்­கப்­பார்க்கிறார்­கள். இவர்­க­ளுக்­குள் அடக்க முடி­யா­த­வர் திரு­வள்­ளு­வர். அது மட்டு­மல்ல, சனா­த­னத்­துக்கு எதி­ரா­கவே தனது நூலை உரு­வாக்­கி­னார் திரு­வள்­ளு­வர்.

“திருக்­கு­றள் என்­பது சம­யத்­திற்­கா­கத் தோன்­றிய நூலன்று. பிற்­கா­லத்­த­வர்­கள் வட­மொழி நான்­ம­றை­யோடு திருக்­கு­றள் ஒத்­தது என்­பர். இல்லை, இல்­லவே இல்லை” என்­ற­வர் தவத்­திரு குன்­றக்­குடி அடி­க­ளார். அத்­த­கைய வள்­ளு­வ­ரைத் தான் பார­திய சனா­தனி என்­கி­றார் ஆர்.என்.ரவி.திருக்­கு­றளை இலக்­கி­ய­மாக மட்­டு­மல்­லா­மல், இயக்­க­மா­கப் பரப்பி போற்­றிய மாநி­லம் தமிழ்­நாடு. தமிழ் அமைப்­பு­கள், குறளை நெறி­யா­கக் கடைப்­பிடிக்­கத் தொடங்­கி­னார்­கள். திரு­வள்­ளு­வரை வழி­காட்­டி­யா­கப் போற்­றி­னார்­கள். அப்­போது திரா­விட இயக்­கம் தான் திரு­வள்­ளு­வ­ருக்கு அர­சி­யல், சமூக முகம் கொடுத்­தது. திருக்­கு­றள் மாநா­டு­களை நடத்­தி­யது. திருக்­கு­றளை மலிவு விலைப் பதிப்­பா­கப் போட்டு விற்­பனை செய்­தார் தந்தை பெரி­யார்.

“ஆரி­ய­ரல்­லாத இந்­நாட்டு மக்­கள் அனை­வ­ருக்­கும் சிறப்­பாக இந்­நாட்­டுப் பழங்­குடி மக்­க­ளான திரா­வி­டர்­கள் அனை­வ­ருக்­கும் வள்­ளு­வர் அரு­ளிய திருக்­கு­றள் ஒரு பெரிய செல்­வ­மே­யா­கும். நமது பெரு­மைக்­கும், நெறிக்­கும் (மதத்­துக்­கும்), நாக­ரி­கத்­திற்­கும் வாழ்க்கை முறைக்­கும் எடுத்­துக் காட்­டாக அதில் பல சங்­க­தி­களை நாம் காண­லாம். திருக்­கு­ற­ளின் பேரால் நம் பெரு­மையை திரா­வி­ட­ரல்­லாத மக்­க­ளுக்கு உண­ரச் செய்ய முடி­கி­றது. நமது சரித்­தி­ரத்­திற்­கும் நாக­ரி­கத்­திற்­கும் பல இலக்­கி­யங்­க­ளி­லி­ருந்­தும் பல காரி­யங்­க­ளி­லி­ருந்­தும் ஆதா­ரங்­கள் எடுத்­துக்­காட்ட முடி­யு­மா­யி­னும் அவை பெரும்­பா­லும் பண்­டி­தர்­களுக்­குத் தான் புரி­யும். அவர்­க­ளுக்­குத் தான் பயன்­ப­டும். ஆனால் திருக்­கு­றள் ஒன்­று­தான் பாமர மக்­க­ளும் புரிந்து கொள்­ளும் வகை­யில் எப்­ப­டிப்­பட்ட அறி­வா­ளி­யும் ஏற்­கும் தன்­மைக்கு ஏற்ற ஆதா­ர­மாய் அமைந்­தி­ருக்­கி­றது” என்று 1948 ஆம் ஆண்டு பேசி­ய­வர் தந்தை பெரி­யார்.

உல­கப் பொது­ம­றை­யான திருக்குறளை கபளீகரம் செய்யத் துடிக்கிறது ஆரியக் கும்பல் - முரசொலி விமர்சனம் !

தெய்­வீ­கத்­தன்­மையை வள்­ளு­வ­ருக்கு தந்­து­வி­டக் கூடாது, திருக்­கு­றளை உண்­டாக்­கி­ய­வ­ரின் உண்­மைப் பெயர் மறைக்­கப்­பட்­டு­விட்­டது, திருக்­கு­றள் திரா­விட­நூல், இதனை நன்­றாக மன­தில் பதிய வையுங்­கள், ஆரி­யக் கொள்­கை­களை மடி­யச் செய்ய எழு­தப்­பட்ட நூல் திருக்­கு­றள், புத்­தர் செய்த வேலையை திருக்­கு­றள் செய்­துள்­ளது, திருக்­கு­றளை நான் ஆராய்ச்சி செய்­த­வ­னல்ல; ஆனால் பெரு­மையை உணர்ந்­துள்­ள­வன், என்று பேசிய பெரி­யார், இதனை பாடத்­தில் சேர்க்க வேண்­டும் என்­றார். திருக்­கு­றளை மூன்­றா­கப் பிரித்து எளி­தில் புரி­யும் குறளை கீழ் வகுப்­பு­க­ளுக்­கும், கடி­ன­மா­னதை நடுத்­தர வகுப்­புக்­கும், அதன்­பி­றகு உள்­ளதை மேல் வகுப்­புக்­கும் வைத்­தால் பள்­ளி­க­ளால் மதப்­ப­டிப்போ, ஒழுங்­குப்­ப­டிப்போ தனி­யாக வேண்­டு­வ­தில்லை என்­றார். மாண­வர்­க­ளின் பரீட்­சைக்­குள் திருக்­கு­றளை உண­ரும்­படி செய்­து­விட்­டால் எவ்­வ­ளவோ நன்மை என்­றார். திரா­வி­டர் கழக மாநா­டு­க­ளில் திரு­வள்­ளு­வர் படத்தை திறந்து வைத்­தார்.

« பிறப்­பொக்­கும் எல்லா உயிர்க்­கும் சிறப்­பொவ்வா

செய் தொழில் வேற்­றுமை யான்.

« இரந்­தும் உயிர்­வாழ்­தல் வேண்­டின் பரந்து

கெடுக இவ்­வு­ல­கி­யற்றி யான்.

« மறப்­பினு மோத்­துக் கொள­லா­கும் பார்ப்­பான்

பிறப்­பொ­ழுக்­கம் குன்­றக் கெடும்.

« குடி­செய் வார்க்­கில்லை பரு­வம் படி­செய்து

மானங் கரு­தக் கெடும்.

« தெய்­வத்­தால் ஆகாது எனி­னும் முயற்­சி­தன்

மெய்­வ­ருத்­தக் கூலி தரும்.

« இன்­னா­செய் தாரை ஒறுத்­தல் அவர்­நாண

நன்னயம் செய்து விடல்.

« எப்­பொ­ருள் யார்­யார் வாய்க் கேட்­பி­னும் அப்­பொ­ருள்

மெய்ப்­பொ­ருள் காண்­பது அறிவு.

« எப்­பொ­ருள் எத்­தன்­மைத் தாயி­னும் அப்­பொ­ருள்

மெய்ப்­பொ­ருள் காண்­ப­து அறிவு.

- – ஆகிய குறள்­களை அதி­கம் மேற்­கோள் காட்­டி­னார் பெரி­யார்.

- – தொட­ரும்

banner

Related Stories

Related Stories