தமிழ்நாடு

எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்களுக்கு மிரட்டல் : அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு.. முழு விவரம் என்ன ?

கிராம மக்களை மிரட்டும் விதமாக பேசிய அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் தருமபுரி மாவட்டம் பொம்மிடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்களுக்கு மிரட்டல் : அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு.. முழு விவரம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணலமாய் நியமிக்கப்பட்டதில் இருந்து அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அதிலும் அவர் தமிழ்நாடு முழுக்க யாத்திரை நடத்துவதாக காரில் சொகுசாக ஊர் சுற்றி வரும் அண்ணாமலையின் செயல் சிரிப்பையே ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், கடந்த வாரம் சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்கு வரும் வழியில் உள்ள பி.பள்ளிபட்டி பகுதியில் உள்ள பழைமை வாய்ந்த‌‌ லூர்து அன்னை கிறித்துவ தேவாலயத்திற்கு அண்ணாமலையை பாஜகவினர் அழைத்து சென்றனர்.அப்போது அங்கிருந்த இளைஞர்களும் கிறிஸ்துவர்களும் அண்ணாமலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் அங்கிருந்தவர்கள் புனிதமான இடத்தில் நீங்கள் மாலை போடகூடாது என்றும் கிறிஸ்துவ மக்களுக்கு எதிராகவும் மணிப்பூரில் கிருத்துவ மக்களுக்கு அநீதி இழைத்த பாஜகவினர், எங்களது தேவாலயத்திற்குள் வர அருகதையில்லை எனவும் கூறினார். மேலும், அண்ணாமலையில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு பாஜகவினரே வெளியேறு என தொடர்ந்து கோஷமிட்டனர்.

எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்களுக்கு மிரட்டல் : அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு.. முழு விவரம் என்ன ?

அப்போது அங்கிருந்தவர்களை மிரட்டும் விதமாக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்தார். பின்னர் அந்த பகுதி மக்களும் அங்கு திரண்டு வந்து அண்ணாமலை மற்றும் பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து கோஷமிட்டதால் பரபரப்பான ‌சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து கூட்டத்தினரை சமாதானம் செய்த காவல்துறையினர் அண்ணாமலையை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். வேறு வழியின்றி அண்ணாமலையும் அங்கிருந்து வெளியேறினார்.

இந்த நிலையில், கிராம மகனுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை மிரட்டல் விடுத்ததாக தருமபுரி மாவட்டம், பொம்மிடி காவல் நிலையத்தில் கார்த்திக் என்பவர் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை மீது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தோடு பேசுவது,பொது அமைதியை குலைக்க தூண்டும் வகையில் பேசுவது, வெவ்வேறு வகுப்புகளுக்கிடையே பகைமை மற்றும் வெறுப்புணர்வை உருவாக்கும் நோக்குடன் பேசுவது என153 (A)(a),504,505 (2) மூன்று பிரிவுகளின் கீழ் போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories