தமிழ்நாடு

"லட்சக்கணக்கான இளைஞர்கள் குடும்பங்களில் ஒளிவிளக்கு ஏற்றும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு" : தினத் தந்தி!

இலங்கை மிஞ்சிய சாதனை என்ற தலைப்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பாராட்டி தினத் தந்தி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

"லட்சக்கணக்கான இளைஞர்கள் குடும்பங்களில் ஒளிவிளக்கு ஏற்றும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு" : தினத் தந்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இலக்கை மிஞ்சிய சாதனை!

2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக (ரூ.83 லட்சம் கோடி) உயர்த்த இலக்கு நிர்ணயித்து, அதை நோக்கியே அனைத்து முயற்சிகளையும் முதல்-அமைச்சர் எடுத்து வருகிறார்.

2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக (ரூ.83 லட்சம் கோடி) உயர்த்த இலக்கு நிர்ணயித்து, அதை நோக்கியே அனைத்து முயற்சிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வருகிறார். அந்த இலக்கை அடைவது என்பது சாதாரண காரியமல்ல. அதற்கு தற்போது ஆண்டுக்கு 10 சதவீதம் அளவுக்கு இருக்கும் வளர்ச்சி 16.5 சதவீதமாக உயரவேண்டும் என்று டெலாயிட் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தனியார் பங்களிப்பு இதற்கு மிகமிக இன்றியமையாதது.

தனியார் பங்களிப்பு வசதிகளை ஈர்க்கும் வகையில், தமிழக அரசு கடந்த 7, 8-ந்தேதிகளில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தியது. இந்த மாநாடு மூலமாக ரூ.5% லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

தலைமைத்துவம், நீடித்த நிலைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், சிங்கப்பூர், தென் கொரியா ஆகிய 9 நாடுகள் பங்குதாரர் நாடுகளாகவும், மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தைபே பொருளாதார மற்றும் கலாசார மையம் ஆகியவை சர்வதேச பங்குதாரர்களாகவும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்பட்டன.

"லட்சக்கணக்கான இளைஞர்கள் குடும்பங்களில் ஒளிவிளக்கு ஏற்றும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு" : தினத் தந்தி!

7 நாடுகள் இந்த மாநாடு கண்காட்சியில் தங்களது சர்வதேச அரங்குகளை அமைத்திருந்தன. இதுமட்டுமல்லாமல், 35- க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளும், இந்திய தொழிலதிபர்கள், தலைமை நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இதுவரையில் நடந்த 2 முதலீட்டாளர்கள் மாநாட்டையும்விட இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றியைப்பெற்றுள்ளது. தமிழக அரசு நிர்ணயித்த இலக்கையும் தாண்டி ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. கூடுதலாக ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 180 கோடி முதலீடு கிடைத்ததன் மூலம் இலக்கையும் மிஞ்சி சாதனை படைத்துவிட்டது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 பேருக்கு நேரடியாகவும், 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 பேருக்கு மறைமுகமாகவும் என மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.

தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத்துறை, எரிசக்தித்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, தகவல் தொழில் நுட்பத்துறை, டிஜிட்டல் சேவைகள் துறை மற்றும் பெருந்தொழிற்சாலைகளுக்கு வலுவான விற்பனையாளர் தளத்தை வழங்கும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பாகவே இந்த முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், பெரிய நிறுவனங்களான டாட்டா பவர் நிறுவனம் ரூ.70,800 கோடிக்கும், அதானி நிறுவனம் ரூ.42,768 கோடிக்கும், செம்ப்கார்ப் நிறுவனம் ரூ.37,538 கோடிக்கும், வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடிக்கும், டாட்டா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ரூ.12,082 கோடிக்கும், ஜெ.எஸ்.டபிள்யூ. நிறுவனம் ரூ.12 ஆயிரம் கோடிக்கும் முதலீடு செய்ய இருக்கிறது. இதனால், தமிழக அரசு நிர்ணயித்துள்ளபடி, குறைந்தபட்சம் 75 சதவீத ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்ற வகையில், இந்த மாநாடு தமிழகத்தின் தொழில்வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக இருக்கும் என்று சொன்னால், அது மிக மிக சாலப்பொருத்தமானதாக அமையும். புதிதாக உருவாகப்போகும் வேலைவாய்ப்புகளால் லட்சக்கணக்கான இளைஞர்கள் குடும்பங்களில் ஒளிவிளக்கு ஏற்றப்படும்.

banner

Related Stories

Related Stories