முரசொலி தலையங்கம்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு : திமுக ஆட்சியில் உலகின் தலைசிறந்த மாநிலமாக உயரும் தமிழ்நாடு.. முரசொலி !

உலக முதலீட்டாளர்கள் மாநாடு : திமுக ஆட்சியில் உலகின் தலைசிறந்த மாநிலமாக உயரும் தமிழ்நாடு.. முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகத்தை ஈர்த்த தமிழ்நாடு

முரசொலி தலையங்கம் (10.1.2024)

உல­கத்தை ஈர்க்­கும் மாநி­ல­மாக தமிழ்­நாட்டை உயர்த்­திக் காட்டி இருக்­கிறார் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள். 6 லட்­சத்து 64 ஆயி­ரத்து 180 கோடி மதிப்­பி­லான முத­லீ­டு­க­ளைப் பெறும் அள­வுக்கு உல­கின் கவ­னத்தை ஈர்த்­தி­ருக்­கி­றது தமிழ்­நாடு. இரண்­டரை ஆண்­டு­க­ளுக்கு முன்­னால் தமிழ்­நாட்­டில் திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்சி அமைந்து - ‘திரா­விட மாடல்’ விழு­மி­யங்­க­ளு­டன் முத­ல­மைச்­சர் நாற்­கா­லி­யில் மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் அவர்­கள் அமர்ந்த பிறகு ஏற்­பட்ட மாற்­றங்­கள் இவை.

ஆட்­சிக்கு வந்­த­தில் இருந்து இது­வரை 44 தொழிற்­சா­லை­க­ளுக்கு அடிக்­கல் நாட்டி இருக்­கி­றேன் என்­றும், 27 தொழிற்­சா­லை­க­ளைத் திறந்து வைத்­தி­ருக்­கிறேன் என்­றும் முத­ல­மைச்­சர் அவர்­கள் நெஞ்சை நிமிர்த்­திச் சொல்லி இருக்­கி­றார்­கள். இதன் மூல­மாக 74 ஆயி­ரத்து 757 இளை­ஞர்­கள் மற்­றும் மக­ளிர்க்கு வேலை­வாய்ப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ‘முத­லீட்­டா­ளர்­க­ளின் முதல் முக­வரி தமிழ்­நாடு’ என்ற பெய­ரில் முத­லீட்­டா­ளர்­கள் மாநா­டு­கள் நடத்­தப்­பட்­டன. அதன் மூல­மாக ஒரு லட்­சத்து 90 ஆயி­ரத்து 803 கோடி ரூபாய்க்­கான முத­லீ­டு­கள் ஈர்க்­கப்­பட்­டன. இதன் மூல­மாக 2 லட்­சத்து 80 ஆயி­ரத்து 600 பேருக்கு வேலை­வாய்ப்­பு­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. ஐக்­கிய அரபு நாடு­கள், சிங்­கப்­பூர் மற்­றும் ஜப்­பான் ஆகிய நாடு­க­ளுக்கு மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் சென்­றார்­கள். இதன் மூல­மாக 17 ஆயி­ரத்து 371 பேருக்கு வேலை­வாய்ப்பை ஏற்­ப­டுத்­து­கிற வகை­யில், 7 ஆயி­ரத்து 441 கோடி ரூபாய் மதிப்­பி­லான முத­லீ­டு­கள் வந்­தன. இப்­போது நடந்­தி­ருப்­பது மூன்­றா­வது பெரிய முயற்சி ஆகும்.

கடந்த 7, 8 ஆகிய நாட்­க­ளில் சென்­னை­யில் நடந்த இரண்டு நாள் மாநாட்­டின் மூல­மாக , இறுதி செய்­யப்­பட்ட மொத்த முத­லீ­டு­கள் முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­வாக, 6 லட்­சத்து 64 ஆயி­ரத்து 180 கோடி ரூபாய் என்­பதை மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் அறி­வித்­தி­ருக்­கி­றார்­கள். ‘‘ இந்­தி­யாவே உற்­று­நோக்­கும் இந்த அவை­யில் பெரும் மகிழ்ச்­சி­யோடு அறி­விக்­கி­றேன்” என்­றும் சொல்லி இருக்­கி­றார்­கள். இந்த முத­லீ­டு­கள் மூலம், நேரடி வேலை­வாய்ப்பு என்ற வகை­யில், 14 லட்­சத்து 54 ஆயி­ரத்து 712 நபர்­க­ளுக்­கும், மறை­முக வேலை­வாய்ப்பு என்ற வகை­யில், 12 லட்­சத்து 35 ஆயி­ரத்து 945 நபர்­க­ளுக்­கும் என மொத்­தம் 26 லட்­சத்து 90 ஆயி­ரத்து 657 பேருக்கு வேலை வாய்ப்­பு­கள் கிடைக்­கப் போகி­றது.ஒரு துறை­யில் இருந்து மட்­டு­மல்ல, பல்­வேறு துறை­க­ளின் மூல­மாக முத­லீட்டை ஈர்த்­துள்­ளது தமிழ்­நாடு.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு : திமுக ஆட்சியில் உலகின் தலைசிறந்த மாநிலமாக உயரும் தமிழ்நாடு.. முரசொலி !

* தொழில், முத­லீட்டு ஊக்­கு­விப்பு மற்­றும் வர்த்­த­கத் துறை சார்­பாக, 3 லட்­சத்து 79 ஆயி­ரத்து 809 கோடி ரூபாய் முத­லீ­டு­கள்-

* எரி­சக்­தித் துறை சார்­பாக 1 லட்­சத்து 35 ஆயி­ரத்து 157 கோடி ரூபாய் முத­லீ­டு­கள்-

* வீட்­டு­வ­சதி மற்­றும் நகர்ப்­புற வளர்ச்­சித் துறை சார்­பாக 62 ஆயி­ரத்து 939 கோடி ரூபாய் முத­லீ­டு­கள்

* தக­வல் தொழில்­நுட்­பத் துறை மற்­றும் டிஜிட்­டல் சேவை­கள் துறை சார்­பாக 22 ஆயி­ரத்து 130 கோடி ரூபாய் முத­லீ­டு­கள்

* குறு, சிறு மற்­றும் நடுத்­த­ரத் தொழில் நிறு­வ­னங்­கள் துறை சார்­பாக 63 ஆயி­ரத்து 573 கோடி ரூபாய் முத­லீ­டு­கள் - கிடைத்­துள்­ளன. இவை அனைத்­தும் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மீதும், தி.மு.க. அர­சின் மீதான நல்­லெண்­ணத்­தின் வெளிப்­பா­டு­கள் ஆகும். தொழில் துறை அமைச்­சர் டி.ஆர்.பி. ராஜா அவர்­க­ளின் தொடர்ச்­சி­யான முயற்­சி­யின் மூல­மாக இது சாத்­தி­யம் ஆகி உள்­ளது.

தமிழ்­நாடு என்­பது ‘குண்டு சட்­டிக்­குள் குதி­ரையை ஓட்­டும்’ மாநி­லம் அல்ல. அப்­படி எப்­போ­தும் இருந்­தது இல்லை. 1996-–2001 காலக்­கட்­டத்­தில் மாண்­பு­மிகு முத­ல­மைச்­ச­ராக தலை­வர் கலை­ஞர் அவர்­கள் இருந்தபோது தான் சென்­னை­யைச் சுற்­றி­லும் காஞ்­சி­பு­ரம், திரு­வள்­ளூர், சோளிங்­க­நல்­லூர் என பல்­வேறு தொழிற்­சா­லை­களை உலக நிறு­வ­னங்­கள் வந்து தொடங்­கி­யது. தக­வல் தொழில் நுட்­பத்தை மற்ற மாநி­லங்­கள் உணர்­வ­தற்கு முன்பே, ‘டைட்­டல் பார்க்’ தொடங்­கி­ய­வர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள். தமிழ் நெட் மாநாட்டை 1999 ஆம் ஆண்டே நடத்­தி­ய­வர் முத­ல­மைச்­சர் கலை­ஞர். தமிழை கணினி மொழி­யாக ஆக்­கி­யது அவ­ரது சிந்­தனை.

தமிழ் நிலத்­தில் கால் பதித்து நின்று உல­கத்­தைப் பார்ப்­பதே தமி­ழ­னின் அறிவு ஆகும். ‘திரை­க­ட­லோடி திர­வி­யம்’ தேடி­ய­வர்­கள் நாம். ‘யாதும் ஊரே யாவ­ரும் கேளிர்’ என்ற உல­கப் பொதுமை மானு­டப் பண்பை விளக்­கிய கணி­யன் பூங்­குன்­ற­னின் வார்த்­தையே தமி­ழர்­க­ளின் வாழ்க்கை ஆகும்.வாழ்க்­கைக்கு இலக்­க­ணம் வகுத்து வாழ்ந்த தமி­ழி­னம் - தொழில் துறை­யி­லும் மேன்மை கொண்­ட­தாக இருந்­தது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு : திமுக ஆட்சியில் உலகின் தலைசிறந்த மாநிலமாக உயரும் தமிழ்நாடு.. முரசொலி !

நெசவு, முத்­துக்­கு­ளித்­தல்-, தச்சு, - கப்­பல் கட்­டு­தல், - மீன்­பி­டித்­தல்,- உப்பு விளை­வித்­தல்-, கட்­டு­மா­னம், - பருத்தி, பட்டு உற்­பத்தி - என பல்­வேறு தொழில்­களை செய்­த­வர்­கள் மட்­டு­மல்ல,அந்­தத் தொழில்­களை ஆதி காலத்­தில் இருந்து கடல் கடந்­தும் போய்ச் செய்­த­வர்­கள் தமிழ்­நாட்­டைச் சேர்ந்­த­வர்­கள்.கப்­பல்­க­ளின் மூல­மாக உல­கத்­தின் பெரும்­பா­லான நாடு­க­ளுக்­குச் சென்­றார்­கள். சீனா, கிரீஸ், ரோம், எகிப்து, பாலஸ்­தீ­னம், மெச­ப­டோ­மியா, பாபி­லோ­னியா, பர்மா, இலங்கை ஆகிய நாடு­க­ளுக்­குச் சென்று வாணி­பம் செய்­தார்­கள். தமி­ழ­கப் பொருள்­க­ளான இஞ்சி, மிளகு, ஏலம், இல­வங்­கம் ஆகி­ய­வற்­றுக்கு மேற்கு ஆசிய நாடு­க­ளில் அதி­க­மான தேவை இருந்­தது. இப்­பொ­ருள்­களை வாங்­கிச் செல்ல கிரேக்­கம், ரோமா­புரி வணி­கர்­கள் தமிழ்­நாட்­டுக்கு வந்து சென்­றார்­கள். தங்­கத்­தைப் பெற்­றுக் கொண்டு மிளகை ஏற்­று­மதி செய்­த­வர்­கள் தமி­ழர்­கள். இப்­படி தனித்த தொழில் வளத்­தைக் கொண்ட மாநி­லம் தமிழ்­நாடு.

தானும் வளர்ந்து, இந்­தி­யா­வை­யும் வளர்த்து, உல­கத்­தை­யும் வளர்த்த வளர்க்­கும் மாநி­லம் தான் தமிழ்­நாடு. அந்­தக் காலம் முதல் இந்­தக் காலம் வரை தமிழ்­நாடு இப்­ப­டித் தான் செயல்­பட்டு வரு­கி­றது. இத­னைத் தான் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள், ‘‘ உங்­கள் எல்­லோ­ரை­யும் நான் தொழில்­மு­னை­வோ­ராக மட்­டு­மல்ல – தமிழ்­நாட்­டின் நல்­லெண்­ணத் தூது­வர்­க­ளாக பார்க்­கி­றேன். எனவே, தமிழ்­நாட்டை உல­குக்கு அறி­மு­கம் செய்­யுங்­கள். உலக நாடு­களை தமிழ்­நாட்­டுக்கு அழைத்து வாருங்­கள்” என்று அழைப்பு விடுத்­துள்­ளார்­கள்.தமிழ்­நாட்­டுக்­குள் உல­கம் வந்­து­விட்­டது. உல­கின் தலை­சி­றந்த மாநி­ல­மாக தமிழ்­நாடு உறு­தி­யாக உய­ரும் காலம் வெகு­தூ­ரத்­தில் இல்லை.

banner

Related Stories

Related Stories