தமிழ்நாடு

“உள்ளத்தில் இருப்பது தான் உதட்டில் வரும் என்பார்கள்..” - நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!

உள்ளத்தில் இருப்பது தான் உதட்டில் வரும் என்பார்கள், நிர்மலா சீதாராமன் அவருடைய கொள்கை என்னவோ அதை பேசி இருக்கிறார் என்று அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

“உள்ளத்தில் இருப்பது தான் உதட்டில் வரும் என்பார்கள்..” - நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை புரசைவாக்கம் பகுதியில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் சேகர்பாபு மற்றும் தயாநிதி மாறன் எம்.பி ஆகியோர் நிவாரண பொருட்களை வழங்கினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, "உள்ளத்தில் இருப்பது தான் உதட்டில் வரும் என்பார்கள். நிர்மலா சீதாராமன் அவருடைய கொள்கை என்னவோ அதை பேசி இருக்கிறார். குறைகளை தெரிவித்தால் அதனை நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

குற்றம் இல்லை என்பது தெரிந்தும் சிலர் குற்றம் குற்றம் என்று சொல்வார்கள் அவர்களை நாங்கள் கண்டு கொள்வதில்லை. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெருமாள் சுற்றி வரக்கூடிய தெருவில் சுத்தம் செய்யும் பணியை அறநிலையத்துறை இரண்டு நாட்களிலேயே முடித்து விட்டது. குறைகள் எங்கிருந்து வந்தாலும் அதை சரி செய்யும் ஆட்சிதான் திமுக ஆட்சி.

“உள்ளத்தில் இருப்பது தான் உதட்டில் வரும் என்பார்கள்..” - நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் உண்டியல் பணம் எண்ணப்படும் போது வெளிப்படை தன்மை கடைபிடிக்கப்படுகிறது. உண்டியல் பணத்தின் கணக்கு வழக்குகள் முறையாக பராமரிக்கப்படுகிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் டெண்டர் அதிமுக ஆட்சிக்காலத்தில் விடப்பட்டுள்ளது. இப்போது தனியாருக்கு விடப்பட்டுள்ள டெண்டர் வெளிப்படை தன்மையுடன் விடப்பட்டுள்ளது. இப்போது சட்ட திட்டத்திற்கு உட்பட்டு சிறு தவறுகள் கூட நடைபெறாமல் வெளிப்படை தன்மையோடு டெண்டர் கோரப்பட்டது. எந்த குற்றச்சாட்டு முன் வைத்தாலும் பதில் சொல்ல சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தயாராக இருக்கிறது .

“உள்ளத்தில் இருப்பது தான் உதட்டில் வரும் என்பார்கள்..” - நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்த பிறகு ஏதாவது குற்றச்சாட்டு சொல்ல வேண்டும் என்று புதுப்புது குற்றச்சாட்டை சிலர் சொல்கிறார்கள். இந்தியாவில் இருக்கிற மிகப்பெரிய பேருந்து நிலையமான இதனை கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளதால் சிலருக்கு வயிற்றெரிச்சல்

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களும் வருவார்கள் என்பதை கணக்கிட்டு உணவு மற்றும் பார்க்கிங் கட்டணத்தை கவனத்துடன் மக்கள் பயன்படுகின்ற வகையில் குறைவாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பார்க்கிங் மற்றும் உணவு கட்டணம் விஷயத்தில் கமிட்டி அமைத்து விலை நிர்ணயம் செய்யப்படும்" என்றார்.

banner

Related Stories

Related Stories