தமிழ்நாடு

புத்தாண்டை வரவேற்க தயாரான கொண்டாட்டங்கள் : சென்னை காவல்துறையின் கட்டுப்பாடுகள் என்னென்ன ?

புத்தாண்டை வரவேற்க தயாரான கொண்டாட்டங்கள் : சென்னை காவல்துறையின் கட்டுப்பாடுகள் என்னென்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நாளையோடு இந்த வருடம் முடியவுள்ள நிலையில், உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் விதமாக சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை பெருநகர வடக்கு மற்றும் மேற்கு கூடுதல் ஆணையர் அர்சரா கார்க், தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சிங்கா, போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் சுதாகர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், "புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் துறை சார்பில் 18000 போலீசார் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னை பெருநகர காவல் துறை சார்பில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ள தனியார் கேளிக்கை விடுதிகள் மற்றும் சொகுசு விடுதிகளில் புத்தாண்டுகளை கொண்டாட இரவு 1 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு மணிக்கு மேல் அனைவரும் விடுதிகளை விட்டு வெளியேற வேண்டும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொதுவெளியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் தொடர்பான புகார்கள் காவல்துறையில் பெறப்பட்டால் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

புத்தாண்டை வரவேற்க தயாரான கொண்டாட்டங்கள் : சென்னை காவல்துறையின் கட்டுப்பாடுகள் என்னென்ன ?

தனியார் கேளிக்கை விடுதிகள் மற்றும் சொகுசு விடுதிகளில் போதை பொருட்களை பயன்படுத்துவதை தடுக்க விடுதிகளின் உரிமையாளரிடம் காவல்துறை சார்பில் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுக்க தீவிரமாக கண்காணிக்கவும் காவல்துறைக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தனியார் கேளிக்கை சொகுசு விடுதிகளில் நீச்சல் குளம் அருகில் எந்தவிதமான கொண்டாட்டங்களும் நடத்தக்கூடாது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறக்கூடிய இடங்களை சுற்றி தீ விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் விடுதிகளின் உரிமையாளர்கள் தரப்பில் மேற்கொண்டு இருக்க வேண்டும். காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினால் மட்டுமே அது சாத்தியமாகும்.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்ன வரை உள்ள காமராஜ் சாலையில் இரவு 8 மணிக்கு மேல் எந்த வாகனமும் அனுமதிக்கப்பட மாட்டாது. மாறாக காமராஜ் சாலை முழுவதும் வாகனங்கள் இல்லாமல் பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் பல்வேறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது. அதிவேகமாக வண்டிகளை இயக்கி பைக் ரேஸில் ஈடுபடவும் கூடாது. இவற்றைக் கண்காணிப்பதற்காகவே காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பெசன்ட் நகர் 6வது அவன்யூ சாலையும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாமல் பொதுமக்கள் கொண்டாட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டை வரவேற்க தயாரான கொண்டாட்டங்கள் : சென்னை காவல்துறையின் கட்டுப்பாடுகள் என்னென்ன ?

விபத்தில்லா புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்பதற்காக புதிதாக சென்னை முழுவதும் 6471 அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் மூலமாக குற்றச்ச சம்பவங்கள் நடைபெற்றாலோ போக்குவரத்து விதிமுறைகள் நடைபெற்றாலோ தானாக படம் பிடித்து சென்னை பெருநகர காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகமாக வாகனங்களை ஓட்டவோ குடித்துவிட்டு வாகனம் ஓட்ட கூடாது. அதனை கண்காணிக்க பலவேறு நடவடிக்கை சென்னை பெருநகர காவல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக 42 சிறப்பு வாகன தணிக்கைச் சோதனை அமைக்கப்பட்டுள்ளது. 48 இடங்களில் தற்காலிக காவல் பாதுகாப்புச் சாவடியும், 20 இடத்தில் விதிமுறைகளை மீறி பைக் ரேஸ் சாகசம் போன்றவற்றில் ஈடுபடுபவர்களை கண்காணித்து பிடிக்கவும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக குடிபோதையில் வாகனம் இயக்கினாலோ அல்லது பைக் ரேஸ் சாகசங்களில் ஈடுபட்டாலோ அவர்களை போலீசார் பிடிக்கும் பட்சத்தில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விழிப்புணர்வு காணொளி ஒளிபரப்பப்பட்டு அவர்களிடம் கேள்விகள் கேட்டு தேர்வு நடத்தப்பட்டு காவல்துறை சார்பில் சான்றிதழும் வழங்கப்படும்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொழுது வாகனங்கள் பழுதடைந்தால் காவல் கட்டுப்பட்டாருக்கு தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு உதவ காவல்துறை தயாராக உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிவேகமாக வாகனங்களை ஓட்டிய வழக்கு பதிவு செய்யப்பட்ட வாகன பதிவெண்கள் கொண்ட அனைவரையும் அழைத்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் இயக்கினால் அவர்களது வாகன ஓட்டுனர் உரிமை கண்டிப்பாக பறிமுதல் செய்யப்படும் ரத்து செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குடிபோதையில் வாகனம் ஓட்டி பிடிபட்ட நபர்கள் மீண்டும் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படாது மாறாக அவர்களுக்கு தெரிந்தவர்கள் வந்தால் மட்டுமே அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்" என்று கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories