தமிழ்நாடு

வயதான பெண்மணியை ஏமாற்றி 3 லட்சம் அபகரிப்பு : சிக்கிய ஆட்டோ ஓட்டுநர்.. நடந்தது என்ன ?

வியாசர்பாடியில் வயதான பெண்மணியை ஏமாற்றி 3 லட்சம் அபகரித்த ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

வயதான பெண்மணியை ஏமாற்றி  3 லட்சம் அபகரிப்பு : சிக்கிய ஆட்டோ ஓட்டுநர்.. நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை, வியாசர்பாடி, சாமியார் தோட்டம் 1வது தெருவில் இன்பசெல்வி, (வயது 53) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ராஜேஷ் என்பவரின் ஆட்டோவில் செல்வது வழக்கம். அந்த வகையில், கடந்த நவம்பர் மாதம் ராஜேஷின் ஆட்டோவில் செல்லும்போது, இன்பசெல்வி தனது ஏடிஎம் கார்டு வேலை செய்யவில்லை எனக் கூறியுள்ளர்.

அதற்கு ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ் செல்போன் மூலம் ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் எனக்கூறி, இன்பசெல்வியின் செல்போனை வாங்கி, அதில் வங்கி செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். தனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு இன்பசெல்வி தனது வங்கி கணக்கை சரிபார்த்துள்ளார்.

அப்போது தனது வங்கிக்கணக்கில் இருந்த 3 லட்சம் பணம் மர்மநபர்களால் எடுக்கப்பட்டு மீதம் 2 ஆயிரம் ரூபாய் மட்டும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இன்பசெல்வி, வியாசர்பாடி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

வயதான பெண்மணியை ஏமாற்றி  3 லட்சம் அபகரிப்பு : சிக்கிய ஆட்டோ ஓட்டுநர்.. நடந்தது என்ன ?

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், இன்பச்செல்வியின் வங்கி கணக்கிலிருந்து ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷின் வங்கி கணக்கிற்கு 4 தவணைகளாக மொத்தம் ரூபாய் 3 லட்சம் பணம் சென்றுள்ளது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷை போலிஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த பணத்தை வைத்து புதிதாக ஆட்டோ, இருசக்கர வாகனம், தங்கச்சங்கிலி மற்றும் செல்போன் வாங்கியது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலிஸார் ராஜேஷை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories