தமிழ்நாடு

“எங்களுக்காக உழைத்தவர் - படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து”: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல்!

“கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை படப்பிடிப்புகள் அனைத்தையும் ரத்து செய்து அவரது இறுதி பயணத்தில் பங்கேற்போம்” என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

“எங்களுக்காக உழைத்தவர் - படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து”: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் விஜயகாந்த். பின்னர் 2005ம் ஆண்டு தே.மு.தி.க கட்சியைத் தொடங்கி அரசியலில் கால் பதித்தார். பிறகு 2006 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். பின்னர் 2011ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று தே.மு.தி.க எதிர்க்கட்சி அந்தஷ்தை பெற்றது. இதனால் 2011 -2016ம் ஆண்டு வரை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.

இதையடுத்து அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்வதைக் குறைத்துக் கொண்டார். தொடர்ந்து சிகிச்சை ஓய்வு என்று விஜயகாந்த் இருந்தார். 2020ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 18ம் தேதி மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். இங்கு இரண்டு வாரங்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

“எங்களுக்காக உழைத்தவர் - படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து”: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல்!

இதையடுத்து நேற்று முன்தினம் நடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இன்று விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தே.மு.தி.க தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் காலமானதாக மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கேப்டன் விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்றிருந்தார். மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் இன்று காலை காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

“எங்களுக்காக உழைத்தவர் - படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து”: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் என்.இராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு பாதை அமைத்து அதில் அனைவரையும் ஒருங்கிணைத்தவர். திரைப்பட தயாரிப்பாளர்களை "முதலாளி" என அன்போடு அழைத்தவர். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்களான கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரிடம் அன்பு பாராட்டியவர்.

தமிழ் திரை உலகின் நலனுக்காக உழைத்தவர். தன்னுடன் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களுக்கும் தனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் நலத்திட்டங்கள் வழங்கி மகிழ்ந்தவர்.

அவரது மறைவு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். மனித நேய மிக்க கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை (29.12. 2023) படப்பிடிப்புகள் அனைத்தையும் ரத்து செய்து அவரது இறுதி பயணத்தில் பங்கேற்போம்" என்று கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories