தமிழ்நாடு

“உங்கள் நிர்வாகம் பிரமாதமா இருக்குசார்” : நடைப்பயிற்சி சென்ற முதலமைச்சரிடம் முதியவர் பெருமிதம் !

உங்கள் ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை மிகச் சிறப்பாக செயல்படுகிறது என நடைப் பயிற்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற வங்கி உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

“உங்கள் நிர்வாகம் பிரமாதமா இருக்குசார்” : நடைப்பயிற்சி சென்ற முதலமைச்சரிடம் முதியவர் பெருமிதம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காலையில் அடையாறில் நடைபயிற்சி சென்றுகொண்டு இருந்தபோது அப்பகுதியைச் சேர்ந்த பெரியவர், கனரா வங்கியின் ஓய்வு பெற்ற உதவி பொது மேலாளர்-ஏ. வெங்கட்ராமன் அவர்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை வழியில் சந்தித்தார்.

அப்போது அவர் முதல்வர் அவர்களிடம், 'சார், ஒரு நிமிடம்! என்னுடைய கருத்தைக் கூறலாமா?” என்று வினவினார். உடனே முதல்வர் அவர்களும் "சொல்லுங்கள்" என்றார்.

உடனே அடையாறு காந்திநகர் மெயின் ரோடு எண் 7-ல் வசிக்கும் கனரா வங்கியின் ஓய்வுபெற்ற உதவி பொதுமேலாளர் ஏ.வெங்கட்ராமன் அவர்கள் தனது கருத்தைக் கூறியதாவது:-

உங்கள் நிர்வாகம் பிரமாதமா இருக்குசார் !

ரொம்ப பிரமாதமா இருக்குசார் உங்கள் நிர்வாகம். சிலர் சொல்றாங்க. நீங்க கோயிலுக்கு ஒண்ணும் பண்றதில்லைன்னு. ஆனால் உங்க அட்வைஸ்ல சேகர்பாபு அழகா வேலை செய்கிறார். இந்து சமய அறநிலையத்துறை மிகச்சிறப்பாக செயல்படுகின்றது. இதனை நான் மட்டும் சொல்லவில்லை. எல்லோரும் சொல்கிறார்கள்.

உங்களுடைய ஆட்சியில் அமைச்சராக இருக்கும் சேகர்பாபு கோயிலுக்கு வருமானத்தை அதிகரித்து இருக்கிறார். கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை யாரோ ஆக்கிரமித்து வைத்துஇருக்கிறார்கள். அதனை எல்லாம் மீட்டுக் கொடுத்து இருக்கிறார். இந்த மாதிரி எல்லாம் யாரும் இதுவரை செய்ததில்லை.

முதல்வர் மு.க. ஸ்டாலின்: ஆமாம், ஆமாம். இன்றைக்கு அமைச்சர் சேகர்பாபு ஒரு பேட்டியில் கூட இதற்கானபதிலைநன்றாக கூறி இருக்கிறார்.

அடையாறு ஏ.வெங்கட்ராமன் கோவிலில் நிறைய நடக்கிறது. குறிப்பாக கும்பாபிஷேகம் அதிகமாக நடைபெறுகின்றது. முன்பெல்லாம் கும்பாபி ஷேகமே கிடையாது 10 வருசமா. இப்போது ஆயிரம் கும்பாபி ஷேகங்கள் நடைபெற்று ஆயிரத்து ஓராவது கும்பாபிஷேகம் நடைபெற இருக்கின்றது. நமஸ்காரம்!

இவ்வாறு கனரா வங்கியின் ஓய்வு பெற்ற உதவி பொது மேலாளர் ஏ.வெங்கட்ராமன் உரையாடினார். அதுபோது அமைச்சர் மா.சுப்பிர மணியன் உடனிருந்தார்.

banner

Related Stories

Related Stories