தமிழ்நாடு

whatsappல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு - பா.ஜ.க பிரமுகர் அதிரடி கைது!

வாட்ஸ் ஆப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பா.ஜ.க பிரமுகரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

whatsappல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு - பா.ஜ.க பிரமுகர் அதிரடி கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மாணிக்கவாசபுரம் பகுதியைச் சேர்ந்த எட்வர்ட் ராஜதுரை. இவர் பா.ஜ.க முன்னாள் சிறுபான்மை அணி நிர்வாகியாக இருந்தார்.

இந்நிலையில், இவர் வாட்ஸ் ஆப் குருப் ஒன்றில் அட்மினாக உள்ளார். இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, சாத்தான்குளம் தி.மு.க நகரத் துணைத் செயலாளர் வெள்ள பாண்டியன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் போலிஸார் வழக்குப் பதிவு செய்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசிய எட்வர்ட் ராஜதுரை என்பவரை போலிஸார் கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories