தமிழ்நாடு

”அசைக்க முடியாத ஆவினுக்கு எதிராக செயல்படும் வடநாட்டுக் கைக்கூலிகள்” : அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி!

ஆவின் நிறுவனம் குறித்து புகார் சொல்பவர்களுக்கு அதில் ABC கூட தெரியாது என அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

”அசைக்க முடியாத ஆவினுக்கு எதிராக செயல்படும் வடநாட்டுக் கைக்கூலிகள்” : அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆவின் பாலில் கொழுப்பு திருடப்படுவதாக ஒரு அபத்தமான, மோசமான, பொய்யான பொய்யான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். புகார் கூறுபவர்களுக்கு இதில் ABC கூட தெரியாது என அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், " ஆவின் பாலில் உள்ள கொழுப்பு திருடப்படுவது என்று சொல்வது அபத்தமான, மோசமான ஒரு பொய். இதுபற்றி பேசுபவர்களுக்கு அது புகார் கூறுபவர்களுக்கு இதில் ABCகூட தெரியாது.

ஆவின் நிறுவனம் 4 விதமான பால்களை விற்பனை செய்கிறது. முதலில் டிலைட் பால் 3% கொழுப்பும், 8.5 % புரதம் உள்ளிட்ட பொருட்களுடன் சேர்த்து விற்கப்படுகிறது. அதேபோல், விட்டமின் ஏ மற்றும் விட்டமின் பி என செறிவூட்டப்பட்ட பால் விற்கப்படுகிறது. கொழுப்பு அதிகம் வேண்டும் என்று கேட்பவர்களுக்கு ‘புல் கிரீம் மில்க்’உள்ளது. ஆரஞ்ச் கலர் பாலில் கூடுதலாக, கொழுப்பும், புரதமும் சேர்த்து வழங்கப்படுகிறது.

தற்போது டிலைட் பால் விற்பனை அதிகரித்துள்ளது. பச்சை நிற பால் விற்பனை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 15 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிக்கொண்டு இருக்கிறது. இதுதான் அதிகபட்சம். தற்போது அதையும் தாண்டி விற்பனையாக வாய்ப்பு உள்ளது. 30 லட்சம் லிட்டர் பால் என்பது சராசரியான நியாயமான கொள்முதல்.

”அசைக்க முடியாத ஆவினுக்கு எதிராக செயல்படும் வடநாட்டுக் கைக்கூலிகள்” : அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி!

கொரோனா காலத்தில் 35 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்பட்டது. அப்போது மற்ற நிறுவனங்கள் யாரும் பால் கொள்முதல் செய்யக் களத்தில் இல்லாத நிலை இருந்தது. இப்போது 30 லட்சம் சராசரியாகக் கையாண்டு வருகிறோம். ஆவின் பற்றிப் பேசுகின்றவர்கள்தான் மயக்கமான நிலையில் உள்ளனர்.

அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் தரத்திற்கு ஏற்ற விலையைக் கொடுக்கவில்லை. இப்போது 50% அதிகமாகக் கொடுக்கப்படுகிறது. பால் கொள்முதல் செய்த பின்னர் 10 நாட்களில் பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. இது ‘ரோலக்ஸ் வாட்ச்’ கட்டிக்கொண்டு ஆடு மேய்க்கும் கதை பேசுபவர்களுக்குப் புரியாது தெரியாது.

அதானி கும்பலை வாழவைக்க எப்படி ஒரு பிரதமர் ஓடுகிறாரோ அதனைப் போன்று இங்கு சில கார்ப்ரேட்களை வாழவைக்க சில கைக்கூலிகள் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள நிறுவனத்தால் நேரடியாக முதலில் பயன்பெறுகின்றவர்கள் கடைக்கோடி விவசாயிகள்.

இந்த விவசாயிகள் நலனுக்காகத் தொடங்கப்பட்ட ஆவின் நிறுவனத்தைத் தகர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒருவர் செயல்படுகிறார் என்றால் அவரை கைக்கூலி அல்லாமல் வேறு யாராக இருக்க முடியும்?.

தமிழ்நாட்டில் ஆவின் அசைக்க முடியாத நிறுவனமாக உள்ளது. இதனால் பால் உற்பத்தியாளர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கிறது. வருடம் முழுவதும் விலை கிடைக்கிறது. இதனால் வட இந்திய நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியவில்லை. இதனால் ஆவின் பெயரைக் கெடுக்க, நற்பெயருக்குக் களங்கள் விளைவிக்க முடியுமா என்று சிலர் பார்க்கிறார்கள்.

ஆவின் பால் பற்றி பரிசோதனை செய்தோம் அதுவும் ‘பெட்’ பாட்டிலில் என்று ஒருவர் சொல்கிறார். ஆவினுக்கு முதலில் ‘பெட்’ பாட்டிலே கிடையாது என்று கூட அவருக்குத் தெரியவில்லை. ஆவின் பால் குறித்த பொய் பிரச்சாரங்களைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories