தமிழ்நாடு

”சமூகநீதி கருத்தைத்தான் நான் பேசினேன் மன்னிப்பு கேட்க முடியாது” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!

நீங்கள் வெறும் தூய்மை பணியாளர்கள் மட்டுமல்ல தூய்மையான உள்ளம் கொண்டவர்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

”சமூகநீதி கருத்தைத்தான் நான் பேசினேன் மன்னிப்பு கேட்க முடியாது” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் தி.மு.க கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் 1250 பேருக்கும், தூய்மை பணியாளர்கள் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் தொழிலாளர்கள் 1000 பேருக்குத் தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீபாவளி பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், " அமைச்சர் சேகர்பாபு உழைப்பதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது. அவருக்கு ஈடாகத் தொண்டர்களாகிய நீங்களும் ஈடு கொடுத்து உழைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். இந்த உழைப்புதான்

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க ஆட்சி அமைத்ததற்குக் காரணமாக இருந்துள்ளது. அதேபோல் உள்ளாட்சித் தேர்தலிலும் உங்களின் உழைப்பின் காரணமாகவே வெற்றியடைந்தோம். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் நிச்சயம் தொண்டர்களாகிய உங்களால் வெற்றி அடைவோம்.

இன்றைக்குச் சென்னை சென்னையாக இருப்பதற்குக் காரணம் தூய்மை பணியாளர்களும், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களும்தான். நீங்கள் தூய்மை பணியாளர்கள் மட்டுமல்ல மனதளவிலும் தூய்மையான மனம் படைத்தவர்கள். சென்னை தூய்மையான காற்றைச் சுவாசிப்பதற்குக் காரணமும் நீங்கள் தான். மாநகரிலேயே முதலில் பணிக்குச் செல்வது தூய்மை பணியாளர்களாகிய நீங்கள் தான் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மக்கள் நலனுக்காக வெயில் மழை என்று பார்க்காமல் உழைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

”சமூகநீதி கருத்தைத்தான் நான் பேசினேன் மன்னிப்பு கேட்க முடியாது” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!

திமுக அரசு, தூய்மை பணியாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தினை முதலமைச்சர் பார்த்து பார்த்து செயல்படுத்தினார். ரூ.55 கோடி செலவில் அவர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இப்படி பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்காகப் பார்த்துப் பார்த்து நம் முதலமைச்சர் செய்து வருகிறார் என்றார்.

மகளிருக்குக் கட்டணம் இல்ல பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் இப்படித் தேர்தலில் கொடுக்காத வாக்குறுதிகளை நமது திராவிட மாடல் முதலமைச்சர் நிறைவேற்றிக் காட்டியுள்ளார்.

திராவிட மாடல் அரசு என்றால் அனைவருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல் அரசு. சமூக நீதி வேண்டும் அனைவரும் சமம் என்பதற்காகவே அன்று சனாதனம் குறித்து பேசினேன். நான் எந்த மத்தையும் இழிவுபடுத்தி பேசவில்லை. நான் மன்னிப்பு கேட்க முடியாது. எங்களுக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories