தமிழ்நாடு

அதிகரிக்கும் வெங்காய விலை.. கூட்டுறவு அங்காடியில் ரூ.30-க்கு விற்பனை - அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு !

கூட்டுறவுத்துறையின் பண்ணை பசுமை காய்கறி கடைகளில் வெங்காயம் கிலோ ஒன்றிற்கு ரூ.30-க்கு விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.

அதிகரிக்கும் வெங்காய விலை.. கூட்டுறவு அங்காடியில் ரூ.30-க்கு விற்பனை - அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாளுக்கு நாள் விலை பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், தற்போது வெங்காயம் விலை அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது வெங்காய விலை ரூ.100-ஐ தொடவுள்ளது. இதனால் பெண்கள், ஆண்கள் என பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். பொதுவாகவே சமையலுக்கு தக்காளி, வெங்காயம் என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்து வந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளானர். பொதுமக்களின் சங்கடத்தை தீர்க்கும் விதமாக தமிழ்நாடு அரசு தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டு வர பாடுபட்டது. அதோடு கூட்டுறவு அங்காடியான, பண்ணை பசுமை கடைகளில் தக்காளி குறைந்த விலையிலேயே விற்கப்பட்டு வந்தது.

அதிகரிக்கும் வெங்காய விலை.. கூட்டுறவு அங்காடியில் ரூ.30-க்கு விற்பனை - அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு !

வெளியில் ரூ.100-க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி, பண்ணை பசுமை கடைகளில் ரூ.60-க்கு விற்பனையானது. மேலும் மக்களுக்கு எளிதாக இருக்க வேண்டும் என்று ரேஷன் கடைகளிலும் தக்காளி விநியோகம் செய்யப்பட்டது. இந்த சூழலில் தற்போது வெங்காயம் விலை அதிகரித்து வரும் நிலையில், பண்ணை பசுமை கடைகளில் ரூ.30-க்கு வெங்காயம் விற்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியர்கருப்பான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு பின்வருமாறு :

“கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் வெங்காயத்தின் விலை அதிக அளவு உயர்ந்து வருகிறது. பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயத்தினை விற்பனை செய்திட தமிழ்நாடு அரசு வெங்காயத்தின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.

கோப்பு படம்
கோப்பு படம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் படி ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பாதிப்படையாமல் இருக்க கூட்டுறவுத்துறையின் மூலமாக முதற்கட்டமாக சென்னையில் செயல்பட்டு வரும் 10 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 4 நடமாடும் விற்பனை வாகனங்கள் 6T 60T 14 மையங்கள் மூலம் இன்று முதல் (05.11.2023) வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.

தற்பொழுது உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கூட்டுறவுத்துறையின் மூலமாக பண்ணை பசுமை காய்கறி கடைகள் மூலம் கிலோ ஒன்றிற்கு ரூ.30/- வீதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், தேவைக்கேற்ப தமிழ்நாட்டில் உள்ள வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை பிற பகுதிகளிலும் எடுக்கப்படும். குறுகிய காலத்திற்குள் வெங்காயம் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அரசு முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது"

banner

Related Stories

Related Stories