தமிழ்நாடு

இதுதான் உங்களுக்கான தீபாவளி போனஸ் : ஊழியர்களை ஆச்சரியப்படுத்திய தனியார் எஸ்டேட் உரிமையாளர்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தனது ஊழியர்களுக்கு இருசக்கர வாகனங்களை போனஸாக தனியார் எஸ்டேட் உரிமையாளர் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதான் உங்களுக்கான தீபாவளி போனஸ் : ஊழியர்களை ஆச்சரியப்படுத்திய தனியார் எஸ்டேட் உரிமையாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் அமைந்துள்ளது சிவகாமி எஸ்டேட். திருப்பூர் மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்ட இந்நிறுவனத்தின் உரிமையாளர் சிவக்குமார் பொன்னுசாமி. கடந்த 20 ஆண்டுகளாகக் கீழ்-கோத்தகிரி பகுதியில் தேயிலை சாகுபடி, காளான் தயாரிப்பு, கொய்மலர் சாகுபடி, கேரட், பீட்ரூட் , முட்டைகோஸ் உள்ளிட்ட மலைக்காய் கறிகள் உற்பத்தி உள்ளிட்டவற்றை விவசாயம் செய்து வருகிறார்.

இவர் ஆண்டுதோறும் தனது எஸ்டேட்டில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு, தீபாவளி பண்டிகையின் போது ஸ்மார்ட் டிவி, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களைப் பரிசாகக் கொடுப்பதுடன், போனஸ் தொகையும் வழங்கி சிறப்பித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நீண்ட ஆண்டுகளாக எஸ்டேட்டில் பணியாற்றும் 15 ஊழியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு ராயால் என்பீல்டு இருசக்கர வாகனங்களைப் பரிசாக வழங்கியுள்ளார். தீபாவளி பண்டிகைக்கு போனஸாக விலை உயர்ந்த இருசக்கர வாகனம் கிடைத்ததில் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories