தமிழ்நாடு

புதிய நிறுவனங்களுக்கு ஒப்புதல், 22 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு- அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !

தமிழ்நாட்டில் துறைமுகங்களை வளர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ள தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டு கொள்கைக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய நிறுவனங்களுக்கு ஒப்புதல், 22 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு- அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு பின் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி என்பது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது, ஏற்கனவே தொழில் நடத்தும் நிறுவனங்களும், புதிதாக தொழில்களை நடத்தவும் நிறுவனங்கள் ஒப்புதல் கேட்டு கோரிக்கை வைத்திருந்தனர் அதன் அடிப்படையில் இன்று 8 நிறுவனங்கள் புதிய முதலீடுகளை தொடங்க முன் முடிவுகளை அளித்து இருந்தனர். அவர்களுக்கான தொகுப்பு சலுகைகளை வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிறுவனங்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் 7108 கோடி ரூபாய் அளவு முதலீடு செய்ய உள்ளனர். இதன் மூலம் 22,536 வேலை வாய்ப்பு உருவாகும். அதேபோல, இந்த நிறுவனங்கள் மின்சார வாகன பாகங்கள், காலணி உற்பத்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு பொருட்கள், கண்ணாடி பொருட்கள், ஆராய்ச்சி பொருட்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்க உள்ளனர்.

புதிய நிறுவனங்களுக்கு ஒப்புதல், 22 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு- அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !

தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டு கொள்கை 2023 உருவாக்கப்பட்டு அதற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறு துறைமுகங்கள் மேம்பாட்டு கொள்கையாக இருந்தது. தற்போது சிறு துறைமுகங்களாக இல்லாமல் அனைத்து துறைமுகங்களும் வளர்ச்சி அடையும் வகையில் இந்த கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. கடந்த 16 ஆண்டுகளில் இந்த துறைமுகங்கள் மூலம் தொழில் நிறுவனங்களை ஈர்க்க பல்வேறு மாநிலங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதற்கு ஏற்றவாறு பல்வேறு மாநிலங்களில் உள்ள புதிய கொள்கைகளை ஆய்வு செய்து அதில் இருந்து இந்த கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது.

பெரிய கப்பல்களை நிறுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும். அதற்கு தனியார் முதலீடுகள் தேவைப்படும் என்பதால் கடல் புறம்போக்கு நிலங்களை நீண்ட காலம் வாடகைக்கு விட இந்த கொள்கை வழி வகை செய்கிறது. திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் பத்திரிகையாளர்களுக்கு நிலம் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது" எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories