தமிழ்நாடு

“திமுக கொள்கை பரப்புச் செயலாளராக செயல்படுகிறார் ஆளுநர் RN ரவி!” - போட்டுத் தாக்கிய திண்டுக்கல் ஐ லியோனி !

“ஆளுநர் திராவிடம் என்ற பழுத்த மரத்தின் மீது, பொய் என்ற கற்களைத் தொடர்ந்து வீசிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவரால் திராவிட சித்தாந்தத்தை சாய்த்து விட முடியாது” என திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்துள்ளார்.

“திமுக கொள்கை பரப்புச் செயலாளராக செயல்படுகிறார் ஆளுநர் RN ரவி!” - போட்டுத் தாக்கிய திண்டுக்கல் ஐ லியோனி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திராவிட இயக்கங்களின் ஆட்சியில் தமிழ்நாடு விடுதலை போராட்ட வீரர்களின் வரலாறுகள் பாடநூல்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் நடைபெற்ற மருது சகோதரர்களின் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டு விடுதலை வீரர்களின் வரலாறும், அவர்களுக்கு தமிழ்நாடு அரசு செலுத்தும் மரியாதை எதுவும் தெரியாமல் ஆளுநர் பேசி வருவதாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியது பின்வருமாறு :

அண்மையில் நடைபெற்ற மருது சகோதரர்களின் ஒரு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். அதில் தமிழ்நாடு விடுதலை வீரர்கள் திராவிட மாடல் ஆட்சியில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் கூறியிருந்தார். ஆளுநர் ரவி பேசியது அடிப்படை ஆதாரம் இல்லாத பேச்சு குற்றச்சாட்டு. பாடநூலை வாசித்து விட்டு இந்த கருத்தை சொல்லி இருக்க வேண்டும், இல்லையென்றால் பாடநூலை வைத்து பாடம் எடுக்கும் ஆசிரியர்களிடம் இந்த விவரம் குறித்து கேட்டு பிறகு அதைப் பற்றி பேசி இருக்க வேண்டும்.

“திமுக கொள்கை பரப்புச் செயலாளராக செயல்படுகிறார் ஆளுநர் RN ரவி!” - போட்டுத் தாக்கிய திண்டுக்கல் ஐ லியோனி !

எதுவும் செய்யாமல் பொத்தாம் பொதுவாக தமிழ்நாட்டு விடுதலை வீரர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு இருக்கிறார்கள், விடுதலைப் போராட்ட வரலாறு தெற்கிலிருந்து தான் துவங்கு வேண்டும் என்ற அரிய கண்டுபிடிப்பை அவர் சொல்லியிருக்கிறார். தமிழ்நாடு பாடநூல் புத்தகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் பாடங்கள் உள்ளது.

6-ம் வகுப்பில் காந்தி தொடங்கி வட இந்திய விடுதலை வீரர்களும், 7 கப்பலோட்டிய தமிழன், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், குயிலி, மருது சகோதரர்கள் வரை 12 ஆம் வகுப்பு வரை விடுதலை வீரர்களின் வரலாறுகள் இடம் பெற்று இருக்கிறது.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் ஒன்றிய அரசு நடத்திய ஊர்வலத்தில் நம்முடைய தமிழ்நாடு விடுதலைப் போராட்ட வீரர்கள் அடங்கிய வாகனங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அந்த வாகனத்தில் மருது சகோதரர்கள், வ.உ.சிதம்பரனார் சிலைகளின் வரலாறு இடம்பெற்றிருந்தது. ஆனால் அந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் செய்தது ஒன்றிய அரசு. இதனால் திரும்ப அந்த வாகனத்தை தமிழ்நாடு முழுவதும் திரும்ப அனுப்பி தமிழ்நாட்டைச் சேர்ந்த விடுதலை வீரர்களின் வரலாற்றை தமிழ்நாடு முழுவதும் தெரிவிக்க வைத்தவர் நம்முடைய முதல்வர் அவர்கள்.

தமிழ்நாடு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு, தமிழ்நாடு முதல்வர் செய்கின்ற அந்த பணிகள் விடுதலை வீரர்களை கௌரவிக்கின்ற விதம், ஒவ்வொரு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் விழாவில் அந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய விடுதலை வீரர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதாரம் இல்லாமல் பேசுவது வன்மையாக கண்டிக்க கூடிய விஷயம். ஆனாலும் ஆளுநர் இப்படி பேசுவது எங்களுக்கு நல்லதாக தான் தெரிகிறது. தமிழ்நாடு முதல்வர் அவர்கள் இந்த ஆளுநரே தொடர்ந்து இருக்கட்டும் என்று கருத்து சொல்லியிருக்கிறார். ஆளுநர் உண்மைக்கு புறம்பான கருத்துகளை சொல்ல சொல்ல, உண்மையை மக்களிடம் சொல்ல ஒரு வாய்ப்பை ஆளுநர் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆளுநர் கொள்கை பரப்பு செயலாளர் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் இந்த ஆளுநர் தொடர்ந்து இருப்பது நல்லது.

“திமுக கொள்கை பரப்புச் செயலாளராக செயல்படுகிறார் ஆளுநர் RN ரவி!” - போட்டுத் தாக்கிய திண்டுக்கல் ஐ லியோனி !

ஆளுநர் திராவிடம் என்ற பழுத்த மரத்தின் மீது, பொய் என்ற கற்களைத் தொடர்ந்து வீசி, திராவிடம் என்ற மரத்தை கீழே தள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ஆளுநர் கற்களை வீச வீச மரத்தில் இருக்கக்கூடிய சமூக நீதி, சமத்துவம், மகளிர் விடுதலை போன்ற திராவிட சிந்தனைகளின் நல்ல கனிகள் மக்களுக்கு சென்று கொண்டே இருக்கிறது. இதனால் திராவிட சிந்தனையையோ, திராவிட சித்தாந்தத்தையோ அவரால் சாய்த்து விட முடியாது. தொடர்ந்து திராவிட சித்தாந்தம் நிலைத்து நிற்கும்.

இந்திய விடுதலை வீரர்கள், தமிழ்நாடு விடுதலை வீரர்கள் தமிழ்நாடு பாடப் புத்தகத்தில் உள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பொறுமையாக உட்கார்ந்து படித்தால் அதுவே ஒரு வெள்ளை அறிக்கையாக இருக்கும். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இன்னும் நிறைய சலுகைகளை கொடுக்க வேண்டும் என்ற சுதந்திர போராட்ட வீரர் பாலசுப்பிரமணியத்தின் கருத்து வரவேற்க வேண்டும்.

தலைவர்களை குறிப்பிட்ட சாதிக்குள் அடைப்பது அந்த சாதியைச் சேர்ந்தவர்களின் தவறு. எந்த ஒரு தேசிய தலைவர்களும் சாதி, மத வேறுபாடு இன்றிதான் மக்களுக்காக போராடினார்கள். குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் இவர்கள் எங்கள் தலைவர் என்று சொல்வது தவறான விஷயம். தலைவர்கள் மீது தவறு கிடையாது அந்த சாதியைச் சேர்ந்த மக்களின் தவறு, சாதிய தலைவர்களாக சித்தரிப்பது தவறான ஒன்று.

சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் தர மறுக்கின்ற தமிழ்நாடு ஆளுநரின் எண்ணம் தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களை புறக்கணிப்பதற்கு இதுவே ஒரு நேரடியான எடுத்துக்காட்டாகும். இந்தியா என்ற பெயரை பார்த்து அவர்கள் பயந்து போய் உள்ளனர். இந்தியா என்று சொல்வது தான் அனைவருக்கும் பெருமை. அண்ணாமலை 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள புத்தகத்தை படித்தால் அவரே வெள்ளை அறிக்கை வெளியிடுவார். சாவர்க்கரை ஒரு விடுதலை போரட்ட வீரர் என்பதை அங்கிகரிக்க முடியாது” என்றார்.

banner

Related Stories

Related Stories