தமிழ்நாடு

பொய்... பொய்... பொய்... ஆளுநர் மாளிகையின் குட்டை ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய தமிழ்நாடு காவல்துறை !

ஆளுநர் மாளிகை கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

பொய்... பொய்... பொய்... ஆளுநர் மாளிகையின் குட்டை ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய தமிழ்நாடு காவல்துறை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை ராஜ்பவனில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு கடந்த 25-ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த விவகாரத்தில் அங்கு பணியில் இருந்த காவலர்கள் பெட்ரோல் குண்டு வீசிய வினோத் என்ற கருக்கா வினோத்தை மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் குற்றவாளி தப்பியோடிவிட்டதாகவும், தமிழ்நாடு காவல்துறை இதுகுறித்து எந்த ஒரு வழக்கும் பதியவில்லை என்றும் போலியான குற்றச்சாட்டை மாறி மாறி ஆளுநர் மாளிகை முன்வைத்து வருகிறது. மேலும் குற்றவாளி மீது காவல்துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் போலியான குற்றசாட்டை முன்வைத்துள்ளது ஆளுநர் மாளிகை.

இதனை முறியடிக்கும் விதமாக நேற்று தமிழ்நாடு காவல்துறை விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் ஆளுநர் மாளிகை மாறி மாறி கூறிய அப்பட்டமான பொய் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் இன்று செய்தியாளர்களை சந்தித்து ஆதாரத்தோடு தமிழ்நாடு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் இது குறித்த சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டுள்ளது.

பொய்... பொய்... பொய்... ஆளுநர் மாளிகையின் குட்டை ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய தமிழ்நாடு காவல்துறை !

இதனிடையே ஆளுநர் மாளிகையோ அடுக்கடுக்காக ஒவ்வொரு பொய்யையும் கூறி வந்தது. அதாவது சம்பவம் நடந்த நாளான 25-ம் தேதி, ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் தப்பித்து விட்டதாகவும், பின்னர் குற்றவாளியை அங்கு பணியில் இருந்த ஊழியர் பிடித்ததாக மறுநாள் காலையும், அதோடு குற்றவாளியை அவசர கதியில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதால் குற்றத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளதாக மறுநாள் மாலையும் என்று முன்னுக்கு பின் முரணாக குற்றம்சாட்டியது.

இந்த நிலையில், ஆளுநரின் இந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய் என்று தற்போது தமிழ்நாடு காவல்துறை ஆதார பூர்வமாக தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள சிசிடிவி காட்சிகளில் காவி நிற உடையில் கருக்கா வினோத் நந்தனம் சிக்னலில் இருந்து சைதாப்பேட்டை, சின்னமலை வழியாக ராஜ்பவன் வரை தனியாக நடந்து சென்றுள்ளார். மேலும் அப்படி சென்ற கருக்கா வினோத் தான் வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை வீச முயன்றுள்ளார். அது ராஜ்பவனின் நுழைவாயில் முன்பு விழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

பொய்... பொய்... பொய்... ஆளுநர் மாளிகையின் குட்டை ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய தமிழ்நாடு காவல்துறை !

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் கும்பலாக இருந்ததாக ஆளுநர் மாளிகை வைத்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த போலீசார், சம்பவம் நடத்தியது கருக்கா வினோத் என்ற தனி நபர் மட்டுமே என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அதோடு பெட்ரோல் குண்டு வீசியதால், ஆளுநர் மாளிகையின் பிரதான நுழைவாயில் கடும் சேதாரம் ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அதற்கும் மறுப்பு தெரிவித்த காவல்துறை, குற்றவாளி கருக்கா வினோத் வீசிய பாட்டிலில் இருந்து தீ எதுவும் பற்றவில்லை என்றும், அவர் தூக்கிய எறிந்த பாட்டில் சர்தார் படேல் சாலையில் விழுந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளது.

தொடர்ந்து கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை உள்ளே நுழைய முயன்றதாக கூறப்பட்ட நிலையில், அதுவும் பொய் என்று கூறிய காவல்துறை அவர் உள்ளே நுழைய முயற்சிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் ஆளுநர் மாளிகை கூறியது போல், கருக்கா வினோத்தை அங்கிருந்த பணியாளர் பிடிக்கவில்லை என்றும், மாறாக அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசாரே மடக்கி பிடித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

பொய்... பொய்... பொய்... ஆளுநர் மாளிகையின் குட்டை ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய தமிழ்நாடு காவல்துறை !

மேலும் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 19 அன்று மயிலாடுதுறை சென்றபோது ஆளுநர் கான்வாயில் கல் எறிந்து சேதப்படுத்தியதாகவும், ஆனால் அதுகுறித்து காவல்துறை எந்தவொரு வழக்கும் பதியவில்லை என்றும் ஆளுநர் மாளிகை பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது.

இதற்கும் மறுப்பு தெரிவித்த போலிஸார், ஆளுநர் கான்வாயில் இருந்து 14 வண்டிகள் செல்லும் வரை காவல்துறையினர் பாதுகாப்பு அளித்ததாகவும், ஆளுநரின் வாகனம் தாக்கப்பட்டது என்று கூறுவது உண்மை அல்ல என்றும் விளக்கம் அளித்துள்ளது. மேலும் ஆளுநர் வாகனம் சென்ற பிறகு சாலையில் கருப்பு கொடி வீசியதாக 73 பேர் மீது வழக்கும்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,
அதற்கும் ஆதாரங்கள் உள்ளதாகவும் போலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு மூலம் ஆளுநர் தமிழ்நாடு அரசு மீது வீண் பழியை சுமத்தி வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஆளுநர் கூறிய அனைத்தும் முற்றிலும் பொய் என்ற உண்மையும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

banner

Related Stories

Related Stories