தமிழ்நாடு

”நீட் தேர்வை ஒழித்து கல்வி உரிமை காப்போம்" : முட்டையை காட்டி ஒன்றிய அரசை விமர்சித்த அமைச்சர் உதயநிதி!

நீட் தேர்வை ஒழித்து – நம் கல்வி உரிமை காப்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”நீட் தேர்வை ஒழித்து கல்வி உரிமை காப்போம்" : முட்டையை காட்டி ஒன்றிய அரசை விமர்சித்த அமைச்சர் உதயநிதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தி.மு.கழகத்தின் இளைஞர் அணி – மாணவர் அணி – மருத்துவ அணியின் அடுத்த கட்ட முன்னெடுப்பாக, ‘நீட் விலக்கு – நம் இலக்கு’ எனும் மாபெரும் கையெழுத்து இயக்கம் இன்று தமிழ்நாடு முழுவதும் தொடங்கியுள்ளது.

சென்னையில் கலைவானர் அரங்கில் நடைபெற்ற நீட் விலக்கை வலியுறுத்தும் மாபெரும் கையெழுத்த இயக்க நிகழ்ச்சியில் இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலி, " கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக மாபெரும் உண்ணாநிலை அறப்போரை மேற்கொண்டோமோ, அதே உறுதியுடன், இன்றைக்கு இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளோம். இங்கு மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் அனைத்து கழக மாவட்டங்களிலும் ஆரம்பித்துள்ளோம். இது தி.மு.கழகத்தின் அணிகள் நடத்துகிற கையெழுத்து இயக்கம் என்றாலும், இதனை மாபெரும் மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும். அதன் மூலம் நீட் தேர்வை ஒழிக்க வேண்டும்.

இந்தி திணிப்பு தொடங்கி இப்போ புதிய கல்விக் கொள்கை வரைக்கும் நம் கல்வி உரிமையை எப்படியாவது அழிக்க வேண்டுமென்று பாசிஸ்ட்டுகள் தொடர்ந்து முயற்சிப் பண்ணிட்டே இருக்காங்க. அவற்றை எதிர்த்து நாமும் தொடர்ந்து போராட்டிட்டே இருக்கோம்.

நாமெல்லாம் நீட் தேர்வுக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல போராடுறோம். ஆனால், ஒன்றிய அரசோ, இன்னும் அதிகமாக எப்படி நம் கல்வி உரிமையை சிதைக்கலாம் என்று சிந்திக்கிறது. நீட் தேர்வால் தமிழ்நாட்டில் ஏற்படுகிற பாதிப்பை புரிந்து கொள்ள மறுக்கிறது. நீட்டுக்கு எதிரா, நாம எதிர்க்கட்சியா இருந்தப்போ மக்கள் மன்றத்தில போராடினோம். பிறகு ஆளுங்கட்சியா வந்ததுக்கு அப்புறம் சட்டமன்றத்துல செய்ய வேண்டிய பணிகளை செஞ்சோம்.

முக்கியமா, ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில ஒரு கமிட்டிய நியமனம் செஞ்சு, நீட் தேர்வால ஏற்படுற பாதிப்புகள் குறித்த அறிக்கையை பெற்றோம். அந்த அறிக்கை அடிப்படையில, நீட் விலக்கு மசோதாவை செப்டம்பர் 2021-ல் நிறைவேற்றினோம். அதை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினாரு. பிப்ரவரி 8, 2022-ல மீண்டும் சட்டமன்றத்துல நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றினோம். இப்போது அந்த மசோதா 21 மாதங்களாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் கூட, அந்த மசோதாவுக்கு ஒப்புதல் தரணும்னு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் குடியரசுத் தலைவர் அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். நீட் தேர்வால, அனிதாவில் ஆரம்பித்து ஜெகதீஸ்வரன் வரை 22 உயிர்கள் போயிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நீட் தேர்வால பல குழந்தைகள் தற்கொலை செய்து கொள்கின்றன. இந்த தற்கொலைகளை நிறுத்த வேண்டும்; அதற்கு நம் மாணவர்களின் கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கு தான் இந்த கையெழுத்து இயக்கத்தை நடத்துகிறோம். மருத்துவக்கல்வி சார்ந்து, ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து பல்வேறு இடையூறுகளை நமக்கு தந்து கொண்டிருக்கிறது. இப்போ புதுசா, 10 லட்சம் பேருக்கு 100 டாக்டர் சீட்டுகள் தான் இருக்கனும்னு தேசிய மருத்துவ ஆணையம் அறிவிச்சிருக்கு.

”நீட் தேர்வை ஒழித்து கல்வி உரிமை காப்போம்" : முட்டையை காட்டி ஒன்றிய அரசை விமர்சித்த அமைச்சர் உதயநிதி!

இதனால, தமிழ்நாட்டுல நம்மலால புதிய மருத்துவக் கல்லூரிகள் கொண்டுட்டு வர முடியாது. ஆனா, பாஜக ஆளுகின்ற - மக்கள் தொகை அதிகமா இருக்கிற மாநிலங்களுக்கு கூடுதலா புதிய மருத்துவக் கல்லூரிகள் கிடைக்கும். நீட் வந்தா தரமான டாக்டர்ஸ் கிடைப்பாங்கனு சொன்னாங்க. மெடிக்கல் காலேஜ்ல பணம் வாங்கிட்டு சீட் கொடுக்க மாட்டாங்கனு சொன்னாங்க. ஆனா இப்ப என்ன நடந்திருக்கு? PG medical course படிக்க PG நீட் தேர்வுல எத்தனை பெர்சண்டைல் எடுக்கணும்னு தெரியுமா? முட்டை பெர்சண்டைல். PG நீட் தேர்வுல முட்டை பர்சன்டைல் வாங்கினாலே போதும், மெடிக்கல் காலேஜ்ல சேருறதுக்கு eligible-னு ஆர்டர் போட்டிருக்காங்க.

அதாவது, சும்மா போய் நீட் எழுதிட்டு வந்தாலே போதும், அப்புறம் பணம் கொடுத்து PG மெடிக்கல் சீட் வாங்க முடியும். இதெல்லாம் எவ்வளவு பெரிய கேலிக்கூத்து? உலகத்துல இந்த மாதிரி எங்காவது உண்டா? கொஞ்சம் நினைச்சுப் பாருங்க. இந்த மாதிரியான நேரங்களில் தான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற நமது தலைவர்களின் உழைப்பை நினைச்சுப் பார்க்கிறேன். நமக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க அவங்க எல்லாம். அவங்களுடைய உழைப்பால தான் தமிழ்நாடு இன்னைக்கு கல்வியிலயும் - சுகாதாரத்திலயும் இவ்வளவு தூரம் முன்னேறியிருக்கு. குஜராத்தில் போன வருடம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி கொண்டு வருவது என் கனவுன்னு சொல்றாரு. ஆனா, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், 2006 -2011 கழக ஆட்சியின் போதே, அதனை சிந்தித்து, அதற்கான முயற்சிகளை எடுத்தார்கள்.

ஜனநாயகத்தின் மீது இருக்கிற நம்பிக்கைல தான் இந்த கையெழுத்து இயக்கத்தை திமுகவின் இளைஞரணி – மாணவர் அணி – மருத்துவ அணி தொடங்கியிருக்கு. நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி இன்றைக்கு தமிழ்நாடு முழுக்க பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கக் கூடிய ஜனநாயக இயக்கத்தை தொடங்கியிருக்கோம். கழக நிர்வாகிகள் மாவட்ட – ஒன்றிய –நகர - பகுதி – பேரூர் – கிளைக்கழகத்துடன் இணைந்து இந்த கையெழுத்து இயக்கத்தை நடத்துங்கள். தமிழ்நாட்டில் அனைத்து குடும்பங்களையும் நாம் சந்தித்து கையெழுத்து பெற வேண்டும்.

வெறும் எண்ணிக்கைக்காக கையெழுத்தினை பெறாமல், நீட் தேர்வால் ஏற்படுகிற பாதிப்புகளை எடுத்துச் சொல்லி பொதுமக்களின் கையெழுத்துகளை பெற வேண்டும். நீட் தேர்வால் தங்களின் பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோரை சந்தித்து, கழகத்தின் இந்த முயற்சியை எடுத்துச் சொல்லுங்கள். அவர்களையும், கையெழுத்திட செய்யுங்கள். ஒருவரிடம் கையெழுத்து வாங்கும் போது, அவர் இன்னும் 5 பேரை கையெழுத்திட செய்கிற வகையில், நீட்டின் தீமைகளை எடுத்துக் கூறுங்கள்.

கல்லூரி நிர்வாகங்களிடம் அனுமதி வாங்கி, கல்லூரிகளுக்கு போய் மாணவர்களிடம் நீட்டுக்கு எதிராக கையெழுத்து வாங்கலாம். ஏனென்றால், மாணவர்களுக்கு நீட் தேர்வால் ஏற்படக் கூடிய தீமைகள் நன்றாகவே தெரியும். அவர்களிடம் நீட் ஒழிப்புக்காக தி.மு.கழகம் செய்து வரும் ஒவ்வொரு பணியையும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வால் இன்னொரு சாவு ஏற்படக்கூடாது என்பதை நாம் எல்லோரிடமும் எடுத்துச் சொல்லி கையெழுத்து பெற வேண்டும். இந்த கையெழுத்தை பெறுவதற்கு நாம் இரண்டு வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம்.

ஒன்று இணையத்தளம் மூலம் நீட் ரத்துக்காக கையெழுத்து இடலாம். மற்றொன்று போஸ்ட் கார்டு மூலமாக கையொப்பமிட்டு, அதனை வழங்கலாம். இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இணையதளத்திற்கு சென்று, உங்களுடைய பெயர் – கைபேசி எண் – மாவட்டம் – தொகுதி ஆகியவற்றை பதிவிட்டு, டிஜிட்டல் முறையில் கையெழுத்திடலாம்.

”நீட் தேர்வை ஒழித்து கல்வி உரிமை காப்போம்" : முட்டையை காட்டி ஒன்றிய அரசை விமர்சித்த அமைச்சர் உதயநிதி!

அதே போல, போஸ்ட் கார்டில் நீட் ஒழிப்புக்கான கையெழுத்தை இட்டு, அதனை திருப்பி அளிக்கலாம். ஒன்றிய அரசு தொடர்ந்து நம்மையும் – நம் முயற்சிகளையும் அலட்சியம் செய்துகொண்டே இருந்தால், அடுத்து தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரியான ஒரு வீரமிக்க போராட்டத்தை தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதை ஒன்றிய அரசுக்கு நான் எச்சரிக்கையாகவே சொல்கிறேன். கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம். இதன் மூலம் 50 லட்சம் கையெழுத்து வாங்குகிறோம் என்றால், 50 லட்சம் பேனாக்கள் உயர்ந்து நிற்கிறது என்று அர்த்தம். இந்த 50 லட்சம் பேனாக்களின் மொத்த உருவம் தான் நமது முத்தமிழறிஞர் கலைஞரின் அந்த ஒற்றை பேனா! பேனாவாலும் - தன் கையெழுத்தாலும் தமிழ்நாட்டின் திசைவழியை மாற்றி அமைத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழித்தோன்றல்கள் நாம்.

இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டக் கூடிய திராவிட மாடல் அரசை தந்து கொண்டிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் வழிநடத்தப்படுபவர்கள் நாம். நம் கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும், தமிழ்நாட்டுடைய உரிமைகளுக்காக, நமது மாணவர்களின் கல்வி உரிமைக்காக – நீட் தேர்வு ஒழிப்புக்காக போராடிட்டு தான் இருப்போம்.

மக்கள் உணர்ச்சிக்கு நிகரான ஒரு வலிமையான ஆயுதம் இன்னும் இந்த உலகத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்கள் உணர்ச்சி ஒட்டுமொத்தமாக நீட் தேர்வுக்கு எதிராக உள்ளது என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் நான் அதிமுகவுக்கும் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன்.

அதிமுகவினரும் வாருங்கள் நீட் ஒழிப்புக்காக சேர்ந்து போராடலாம் என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன். அந்த கிரெடிட்டினை கூட எடுத்துக் கொள்ளுங்கள் - நீட் தேர்வை ஒழித்தால் போதும் என்று அழைப்பு விடுத்தேன். இப்போது மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். வாருங்கள் இந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கெடுங்கள்.

கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் பொதுப்பிரச்சினைகளுக்கு, அனைத்து கட்சிகளும் இணைந்து டெல்லிக்கு சென்று எப்படி கோரிக்கைகளை வைத்தோமோ, அதே போல நீட் ரத்துக்காக பெறப்படும் கையெழுத்துகளையும், நாம் எல்லோரும் சேர்ந்தே குடியரசுத் தலைவர் அவர்களிடம் ஒப்படைப்போம்.

பாஜகவோடு கூட்டணியில இருக்கிறப்ப தான் உங்களால எதுவும் பண்ண முடியல. இப்ப தான் கூட்டணியில இருந்து வெளியில வந்துட்டீங்க. அதுவும் தமிழ்நாட்டின் உரிமையை காக்க தான் பாஜக கூட்டணிலிருந்து வெளியேறுனோம்னு சொல்றீங்க.ஆகவே, தமிழ்நாட்டின் உரிமைக்காக, நீட் விலக்குக்காக மாண்புமிகு குடியரசுத் தலைவரை வலியுறுத்துகிற வகையிலான இந்த கையெழுத்து இயக்கத்தில் அதிமுகவும் பங்கெடுக்கலாம். இது ஏதோ திமுகவின் பிரச்சினைனு நினைக்க வேண்டாம், இது தமிழ்நாட்டின் பிரச்சனை. தமிழ்நாட்டு உரிமையைக் காக்க வேண்டும் என்ற உணர்வோடு அதிமுக மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.

இந்த நீட் ஒழிப்புக்கான கையெழுத்து இயக்கத்தை, தி.மு.கழகம் தொடங்கியிருந்தாலும், இதனை மாபெரும் மக்கள் இயக்கமாகத்தான் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம்.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் இடுகிற இந்த ஒவ்வொரு கையெழுத்தும், தமிழ்நாட்டு கல்வி உரிமை போராட்டத்தின் உயிரெழுத்தாக என்றைக்கும் நிலைத்திருக்கும். இந்த நேரத்தில் ஒரு கதையைச் சொல்ல விரும்புகிறேன்.

ஒருமுறை, சாவியைப் பார்த்து, சுத்தியல் கேட்டது. "உன்னைவிட நான் வலிமையா இருக்கேன். ஆனாலும் பூட்டைத் திறக்க நான் கஷ்டப்படுறேன். நீ மட்டும் எப்படி பூட்டை எளிதாக திறக்கிறாய்?" என்று கேட்டது. அதற்கு சாவி பதில் சொன்னது, "நீ என்னைவிட பலசாலி தான். என்னைவிட நீ உருவத்தில் கூட பெரிய ஆள் தான். ஆனால், பூட்டை திறப்பதற்கு நீ அதன் தலையில் அடிக்கிறாய். ஆனால், நானோ அந்த பூட்டின் இதயத்தை சென்று தொடுகிறேன். அதனால் தான் என்னால் எளிதாக திறக்க முடிகிறது" என்று சாவி சொன்னது.

”நீட் தேர்வை ஒழித்து கல்வி உரிமை காப்போம்" : முட்டையை காட்டி ஒன்றிய அரசை விமர்சித்த அமைச்சர் உதயநிதி!

எனவே, பாஜக என்கிற சுத்தியல் எவ்வளவு ஓங்கி ஓங்கி அடித்தாலும் அதனால் தமிழர்களின் இதயத்தை திறக்க முடியாது. காரணம், தமிழர்களின் இதயத்தை தொடும் திராவிடக் கொள்கை என்னும் சாவியை தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் திமுகவிடம் ஒப்படைத்து சென்றிருக்கிறார்கள். எனவே, தமிழ்நாட்டின் கல்வி உரிமையை பாதுகாக்க வேண்டி பொறுப்பு நமக்கு இருக்கிறது. நம்முடைய கல்வி உரிமையை சிதைப்பதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்பதற்கு அடையாளம் தான் இந்த கையெழுத்து இயக்கம். இதனை நாம் மிகச்சிறப்பாக நடத்திக் காட்டிட வேண்டும்.

நீட் ஒழிப்புக்காக பெறப்படும், இந்த கையெழுத்துக்கள் அனைத்தும், சேலத்தில் நடைபெறவுள்ள இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாட்டின் போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். அவை மாண்புமிகு குடியரசுத்தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த கையெழுத்து இயக்கமானது, வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருக்கும். இதில் பங்கேற்கும் நீங்கள் ஒவ்வொருவரும், வரலாற்றில் நிலைத்திருப்பீர்கள். தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய தமிழ்நாட்டின் கல்வி உரிமையை பாதுகாக்க – டெல்லிக்கு நம் கடிதங்கள் பறக்கட்டும். நீட் தேர்வை ஒழித்து – நம் கல்வி உரிமை காப்போம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories