தமிழ்நாடு

'வாங்க நான் கூட்டிட்டுபோரன்" : நரிக்குறவ குடும்பத்திற்கு உதவிய கோட்டாட்சியர் - நெகிழ்ச்சியடைந்த மக்கள்!

நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த பெண் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் உதவி செய்துள்ளது அனைவரையும் நெகிழவைத்துள்ளது.

'வாங்க நான் கூட்டிட்டுபோரன்" : நரிக்குறவ குடும்பத்திற்கு உதவிய கோட்டாட்சியர் - நெகிழ்ச்சியடைந்த மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியராக பணியாற்றி வருபவர் முருகேசன். இவர் கறம்பக்குடி பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்களுக்குப் பட்டா மற்றும் சாதி சான்றிதழ்களை அண்மையில் வழங்கினார்.

இதற்காக நடந்த நிகழ்ச்சியில் சங்கீதா என்ற நரிக்குறவ பெண் தனது கை குழந்தையுடன் வந்துள்ளார். அப்போது முருகேசன் குழந்தையை நலம் விசாரித்தார். அப்போது சங்கீதா, குழந்தையின் வயதிற்கும் உடல் வளர்ச்சிக்கும் சம்மந்தமில்லாமல் இருப்பதாகக் கூறியுள்ளார். அப்போதுதான் குழந்தையைக் கவனித்தபோது வளர்ச்சி குறைபாடு இருந்தது தெரியவந்ததுள்ளது.

பின்னர் அடுத்த நாள் கோட்டாட்சியர் சங்கீதாவையும் அவரது குழந்தையையும் அழைத்துக் கொண்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்குக் கோட்டாட்சியர் முன்னிலையிலேயே மருத்துவர்கள் குழந்தையைப் பரிசோதித்தனர்.

'வாங்க நான் கூட்டிட்டுபோரன்" : நரிக்குறவ குடும்பத்திற்கு உதவிய கோட்டாட்சியர் - நெகிழ்ச்சியடைந்த மக்கள்!

இதையடுத்து 15 நாட்கள் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் குழந்தையின் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த 15 நாட்களும் அனைத்து உதவிகளும் கோட்டாட்சியரே நேரடியாக இருந்து அவர்களுக்குச் செய்து கொடுத்துள்ளார்.

இது குறித்து குழந்தைக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் பலசுப்பிரமணி, குழந்தைக்குத் தேவையான அனைத்து சிகிச்சையும் அளித்துள்ளோம். ஒரு மாதங்கள் கழித்த பிறகுதான் குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பது தெரியவரும். அதற்கு பிறகே அடுத்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்" என தெரிவித்துள்ளார்.

தனது குழந்தைக்குச் சிகிச்சை கிடைத்துள்ளதை அடுத்து சங்கீதா மகிழ்ச்சியுடன் இருக்கிறார். இது குறித்துக் கூறும் அவர், "எங்களைக் கண்டுகொள்ளாமல் விலகிச் செல்பவர்கள் மத்தியில் ஒரு அரசு அதிகாரியே நேரியாக எங்களுக்கு உதவி செய்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் வாழ்நாள் முழுவதும் நாங்கள் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories