தமிழ்நாடு

“பெண்களின் சம உரிமைக்காக போராடியவர் பெரியார், அண்ணா, கலைஞர் !” - மாணவிகளிடம் தயாநிதி மாறன் MP பேச்சு!

அப்பாவின் சொத்துகள் பெண் பிள்ளைகளுக்கும் சேரும் என்ற வரலாற்றை உருவாக்கியவர் கலைஞர் என்று கல்லூரி நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் பேசியுள்ளார்.

“பெண்களின் சம உரிமைக்காக போராடியவர் பெரியார், அண்ணா, கலைஞர் !” - மாணவிகளிடம் தயாநிதி மாறன் MP பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரியில் மாணவர்களுக்கு மன ஆரோக்கியத்திற்கான கருத்தரங்க நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய எம்.பி தயாநிதி மாறன், மாணவர்கள் தங்களை ஏதாவதொரு விளையாட்டில் ஈடுபடுத்தி கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்.

இதுகுறித்து பேசிய அவரும், "தற்போது படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டளைகள் தொடர்ந்து இருக்கும். நாம் என்னவாக ஆக வேண்டும் என்று எண்ணும்பொழுது அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர வேண்டிய கட்டாயம் இருக்கும். முன் இருந்த குழந்தைகள் கூட்டுக்குடும்பமாக வளர்ந்தனர். இப்போது உள்ளவர்களுக்கு செல்போன் தான் நண்பன், உலகம் எல்லாமே. வெறும் 22 வயதை நெருங்கும் முன்னரே திருமணத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

“பெண்களின் சம உரிமைக்காக போராடியவர் பெரியார், அண்ணா, கலைஞர் !” - மாணவிகளிடம் தயாநிதி மாறன் MP பேச்சு!

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் சமூகத்தில் பெண்களுக்கான உரிமைகள் என்பது கொடுக்கப்படாமல் இருந்தது. 10 வயதிற்கும் கீழ் உள்ளவர்களுக்கு குழந்தை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. ஆனால் பெண்களுக்கு சம உரிமை வேண்டி பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்டோர் போராடினர். இந்தியாவில் முதல்முறையாக, அப்பாவின் சொத்துகள் பெண் பிள்ளைகளுக்கும் சேரும் என்ற வரலாற்றை உருவாக்கியவர் கலைஞர்.  எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல்.

நாடாளுமன்றத்தில் 33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்படும் பொழுது, 7% மட்டுமே பெண் பிரதிநிதிகள் மக்களவையில் இருந்தனர். மேலும் இட ஒதுக்கீடு அமலுக்கு வர இன்னும் 10-20 ஆண்டுகள் ஆகும். பஞ்சாயத்து தேர்தலில் 33% இட ஒதுக்கீடு வேண்டி ராஜீவ் காந்தி போராடினார். கலைஞர் அவர்கள் ஒரு படி மேல் போய் பஞ்சாயத்து தேர்தலில் 50% பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்தார். தற்போது தமிழ்நாட்டில் பாதிக்கும் மேல் பெண் மேயர்கள் உள்ளனர்.

“பெண்களின் சம உரிமைக்காக போராடியவர் பெரியார், அண்ணா, கலைஞர் !” - மாணவிகளிடம் தயாநிதி மாறன் MP பேச்சு!

மருத்துவர்கள் ஆக வேண்டும் என்பது தமிழ்நாட்டில் உள்ள ஏராளமான மாணவர்களின் கனவாக உள்ளது. ஆனால் ,நீட் தேர்வை கொண்டுவந்து, மாணவர்களின் கனவை கலைக்கிறது ஒன்றிய பாஜக அரசு. நீட் தேர்வில் தேர்ச்சிபெற முடியாததால் மாணவர்கள் மன அழுத்தத்தால் தற்கொலைக்கு ஆளாகின்றனர். ராஜஸ்தானில் இதுவரை, 22 பேருக்கும் மேல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

எங்கு சென்றாலும் நமக்கு pressure என்பது இருக்கதான் செய்யும். மனநல அமைதி என்பதுமிகவும் முக்கியம். மாணவர்கள் தங்களை ஏதாவதொரு விளையாட்டில் ஈடுபடுத்தி கொள்ளுங்கள். மேலும் பாஜக தலைவர்கள் கூறும் கருத்தை சரியா..! தவறா..! என்று பார்க்கவும், அதன்படி இணையதளத்தை அதிகமாக உபயோகிக்க வேண்டாம்" என்று மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்.

banner

Related Stories

Related Stories