தமிழ்நாடு

”கொடநாடு வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்" : பேரவையில் முதலமைச்சர் உறுதி!

கொடநாடு வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

”கொடநாடு வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்" : பேரவையில் முதலமைச்சர் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் அக்.9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் தமிழ்நாடு அரசின் முதல் துணை மதிப்பீடுகளை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். மேலும் அன்றைய தினமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த காவிரி விவகாரம் தொடர்பான தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பின்னர் இரண்டாவது நாள் நடைபெற்ற கூட்டத் தொடரில், வரி மதிப்பீட்டு ஆண்டில் ரூபாய் ஐம்பதாயிரத்திற்குக் குறைவாக வரி, வட்டி, அபராதத் தொகை செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு இந்நிலுவைத் தொகையானது முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என விதி 110-ன்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

”கொடநாடு வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்" : பேரவையில் முதலமைச்சர் உறுதி!

இதனைத் தொடர்ந்து இன்று மூன்றாவது நாள் கூட்டத் தொடர் நடைபெற்றது. இதில் கொடநாடு விவகாரம் தொடர்பாகச் சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

இதற்கு விளக்கம் அளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கொடநாடு வழக்கு சிபிசிஐடியின் கீழ் இருப்பது அனைவருக்கும் தெரியும். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டோம். சிபிசிஐடியின் விசாரணை அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. கொடநாடு வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை உறுதியுடன் கூறுகிறேன்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories