தமிழ்நாடு

“காவிரி விவகாரத்தில் பிரச்சனையை உண்டாக்குவதே பாஜகதான்” - வெளுத்து வாங்கிய கே.எஸ்.அழகிரி !

கர்நாடக மக்களோ பிற கட்சியினாரோ அங்கு பிரச்சனை ஏற்படுத்தவில்லை கர்நாடக பாஜக தான் அங்கு பிரச்சனை ஏற்படுத்தி வருகின்றனர் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

“காவிரி விவகாரத்தில் பிரச்சனையை உண்டாக்குவதே பாஜகதான்” - வெளுத்து வாங்கிய கே.எஸ்.அழகிரி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள், காமராஜர் அவர்களின் 46வது நினைவு நாள் மற்றும் முன்னாள் பிரதமர் தலைவர் லால் பகதூர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மூவரின் திருருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காவிரி பிரச்சனைகள் எல்லாம் முறையாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், பாரதிய ஜனதா மட்டும் நாடகம் ஆடி வருகிறது. காவிரியில் இருந்து நமக்கு எவ்வளவு தண்ணீர் வரவேண்டும் என்பதை உச்ச நீதிமன்றமும் காவிரி ஆணையமும் தெளிவாக சொல்லி இருக்கிறது.

“காவிரி விவகாரத்தில் பிரச்சனையை உண்டாக்குவதே பாஜகதான்” - வெளுத்து வாங்கிய கே.எஸ்.அழகிரி !

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக ராஜதந்திரத்தோடு வாய்ப்பேச்சால் பயனில்லை, நமக்கு தண்ணீர் வந்தால் போதும் என்று தெளிவாக கையாளுகிறார். கர்நாடகாவில் தண்ணீரை திறந்து விடும் போது எல்லாம் பிரச்சனை செய்வது பாரதிய ஜனதா தான். அதற்கு மக்கள் ஆதரவு இல்லை; அணையின் அளவு எவ்ளோ அதற்கு ஏற்ப அளவிற்கு திறந்து விட வேண்டும் என்று காவிரி ஆணையம் கூறி இருக்கிறது.

அப்படி இருக்க எடியூரப்பா, பொம்மை அங்கு எதிர்ப்பு தெரிவித்த போது ஏன் இங்க இருந்து அண்ணாமலை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, கர்நாடகா அரசு சட்டப்படி நமக்கு தண்ணீர் கொடுப்பார்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திற்கு தண்ணீர் வருவதை ஏன் தடுக்கின்றீர்கள் என கர்நாடக பாஜகவினரைப் பார்த்து வாய்திறந்து கேட்க முடியாதவர் தான் அண்ணாமலை." எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories