தமிழ்நாடு

மீண்டும் மீண்டும் வரலாறு தெரியாமல் உளறிக்கொட்டும் அண்ணாமலை.. ஆதாரத்தோடு பதிலடி கொடுக்கும் நெட்டிசன்கள்!

மீண்டும் மீண்டும் வரலாறு தெரியாமல் உளறிக்கொட்டும் அண்ணாமலை.. ஆதாரத்தோடு பதிலடி கொடுக்கும் நெட்டிசன்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே மேலும் பிரச்னைகள் ஆரம்பிக்க தொடங்கியுள்ளது. பாலியல் புகார், கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் பாஜகவை சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பிற கட்சிகளையும் கட்சியினரையும் அவமரியாதையாக பேசுவதோடு, சொந்த கட்சியின் கூட்டணி கட்சி தலைவர்களையும் இழிவாக பேசி வருகிறார்.

அதோடு தனது வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல், வரலாறு கூறுகிறேன், புராணம் கூறுகிறேன் என்று வாய்க்கு வந்தபடி எல்லாம் உளறிவருகிறார் அண்ணாமலை. அந்த வகையில் அண்மையில் கூட பேரறிஞர் அண்ணா குறித்து தவறான தகவலை பேசியதோடு, அது பிரபல பத்திரிகையில் வந்ததாகவும் தெரிவித்தார்.

மீண்டும் மீண்டும் வரலாறு தெரியாமல் உளறிக்கொட்டும் அண்ணாமலை.. ஆதாரத்தோடு பதிலடி கொடுக்கும் நெட்டிசன்கள்!

ஆனால் அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டை அவர் கூறிய அவர் கூறிய அதே ‘தி இந்து’ நாளிதழ் மறுத்து செய்தி வெளியிட்டது. மேலும் அண்ணாமலை கூறியதில் எந்த உண்மையும் இல்லை என்றும் விளக்கமும் தெரிவித்தது. இதனால் அண்ணாமலையின் சாயம் மீண்டும் வெளுத்து போயுள்ளது. அவர் கூறும் பொய்களை பத்திரிகையாளர்கள் வெளிப்படையாக கேள்வி கேட்டால், பதில் சொல்வதற்கு பதிலாக கேள்வி எழுப்பும் பத்திரிகையாளர்களை அவமரியாதை செய்வதையே வாடிக்கையாக வைத்துள்ளார் அண்ணாமலை.

முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் அண்ணாமலை, அவர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசினார். தொடர்ந்து மீண்டும் தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபர்களிடம் பேசி சிக்கலில் சிக்கிக்கொண்ட அவர், அந்த செய்தியாளர் கேட்ட கேள்விக்கு இறுதி வரை சரியான பதிலளிக்காமல் இருந்தார். அதோடு ரபேல் வாட்சுக்கான பில்லை தற்போது வரை கொடுக்கவில்லை. அதைப்பற்றி கேட்டாலும் வரை பதில் வராமல், வேறு விஷயங்களை பேசி பேச்சையுமே திசை திருப்பி வருகிறார்.

அண்மையில், முதுநிலை நீட் தேர்வில் பூஜ்யம் என்று ஒன்றிய அரசு அறிவித்தது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அண்ணாமலை தான்தான் பெரிய அறிவாளி, டேட்டாவுடன் பேசுகிறேன் என்று வாய்க்கு வந்ததை உளறி வைத்து சிக்கலில் சிக்கினார். அப்போதும் இவர் இணையவாசிகள் மத்தியில் கேலிப்பொருளாகவே தெரிந்தார்.

மீண்டும் மீண்டும் வரலாறு தெரியாமல் உளறிக்கொட்டும் அண்ணாமலை.. ஆதாரத்தோடு பதிலடி கொடுக்கும் நெட்டிசன்கள்!

மேலும் திமுக ஆட்சியில் அணைகள் குறைவாகவே கட்டப்பட்டது என்று பேசி மீண்டும் வம்பிழுத்த அண்ணாமலைக்கு, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திமுக ஆட்சியில் 40-க்கும் மேற்பட்ட அணைகள் கட்டியுள்ளதாக பட்டியலிட்டு பதிலடி கொடுத்தார். அப்போதும் இவர் தனது வாயையும் பேச்சையும் குறைக்கவில்லை.

சரி குறை கூறுகிறார் என்றால், அதற்கு குறைந்தது, வரலாற்றையாவது படித்து விட்டு கூறலாம். மீண்டும் தனக்கு தோணுவதை தான் பேசுவேன் என்று பேசி மறுபடியும் நெட்டிசன்கள் மத்தியில் சிக்கியுள்ளார் அண்ணாமலை. இந்த முறை திமுக ஆட்சியில் இல்லாத காலத்தை குறிப்பிட்டு, ஆட்சியில் இருந்ததாக கூறியும், அப்போது முருகன் கோயிலுக்கு மின்சாரம் இல்லை என்று கூறியும் தவறான தகவலை பேசி மாட்டிக்கொண்டுள்ளார் அண்ணாமலை.

நேற்று கோவையில் 'என் மண் என் மக்கள்' நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுகுறித்து பேசிய அவர், "கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் வந்துவிட்டு மருதமலை முருகனை பற்றி பேசாமல் எப்படி இருக்க முடியும். 1962 வரை முருகன் கோயிலில் கரண்ட் இல்லை. முருகனை காண வேண்டும் என்றால் படிக்கட்டில்தான் செல்ல வேண்டும். முருகனுக்கு கரண்ட் கொடுக்க கூடாது என்று திமுக தனது கொள்கையாகவே வைத்துள்ளது.” என்றார்.

ஆனால் 1962-ல் திமுக ஆட்சியில் இல்லை. 1967-ல் தான் பேரறிஞர் அண்ணா திமுக சார்பில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார். வரலாறு தெரியாமல் அண்ணாமலை மீண்டும் மீண்டும் உளறி வருவதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். இந்த வீடியோவை வைரலாக்கி இனியாவது படித்து விட்டு பேசட்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தின் உண்மைத்தன்மையை சிபிஐ(எம்) நிர்வாகி கனகராஜ், தனது சமூக வலைதள பக்கத்தில் கல்வெட்டோடு பதிவேற்றியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு:

“அதாவது1977 ஆம் ஆண்டுவரை மருதமலை முருகன் கோவிலுக்கு மின் இணைப்பு வழங்கவில்லை என்று பொருள். விபரம் அறிந்தவர்கள் சொல்வது இதுதான்.

1962 உத்தேசமாக ‘விவசாயி’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது சாண்டோ சின்னப்பா தேவர் அவர்கள், தானே முன்வந்து பணம் செலுத்தி இணைப்பு பெற்று தந்திருக்கிறார்.அதாவது திமுக ஆட்சிக்கு வரும் முன்பே எப்படி மின் இணைப்பை மறுத்திருக்க முடியும்.

படப்பிடிப்பில் இருந்த எம்ஜிஆர் இந்த இணைப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்.அன்னறைய தினம் அப்போது திமுகவில் இருந்த எம்ஜிஆர் திமுக மன்றம் ஒன்றிற்கும் வடவள்ளியில் அடிக்கல் நாட்டியுள்ளார்.
உண்மை இப்படி இருக்க அண்ணாமலை ஏன் இப்படி பேசுகிறார்? அறியாமையா? இல்லவே இல்லை.இது சங்பரிவாரின் வழக்கமான மூலதனம்தான்.பொய், தந்திரம், நரித்தனம்.

banner

Related Stories

Related Stories