தமிழ்நாடு

முதல் முறை.. உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர்.. அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு !

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியரின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது உடலுக்கு இன்று அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.

முதல் முறை.. உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர்.. அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தேனி மாவட்டம் சின்னமனூர் காந்தி நகர் காலணியைச் சேர்ந்தவர் தனசேகர பாண்டியன் - அன்ன பாக்கியம் தம்பதி. இவர்களது மகன் வடிவேல் (37). தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த இவர், கடந்த செப். 23-ம் தேதி தனது 2 சக்கர வாகனத்தில் வழக்கம் போல் வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது சின்னமனூர் - சீலையம்பட்டி பகுதியில் அவர் செல்லும் போது விதமாக குறுக்கே மாடு வந்ததால் கடும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய வடிவேலுவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவரது தலையில் கடும் காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அக்கமபக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

முதல் முறை.. உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர்.. அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு !

தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விபத்தில் சிக்கிய வடிவேல், பின்னர் அங்கே இருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு பின் தனியார் (அப்பல்லோ) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது மூளைச்சாவடைந்து நேற்று உயிரிழந்தார்.

முதல் முறை.. உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர்.. அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு !

இந்த நிலையில் வடிவேலுவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டிப்பதையடுத்து, இன்று அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. சின்னமனூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் இறுதிச்சடங்கு நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்கிறார்.

முதல் முறை.. உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர்.. அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு !

குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உடன் புரிந்தவர்கள் என அனைவரது இறுதி அஞ்சலிக்குப் பின் சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட எரிவாயு தகன மேடையில் வடிவேலுவின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. உயிரிழந்த வடிவேலுவுக்கு பட்டுலட்சுமி என்ற மனைவியும், தனுஷ் குமார் (10) என்ற மகனும், அக்சயா கௌரி (4) என்ற மகளும் உள்ளனர். மனைவி பட்டுலட்சுமி தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கிளார்க்-காக பணிபுரிந்து வருகிறார்.‌

முன்னதாக உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

banner

Related Stories

Related Stories