தமிழ்நாடு

“இதுதான் என் கடைசி வீடியோ.. இந்த முடிவுக்கு சீமான்தான் காரணம்..” - மீண்டும் வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி!

சீமான் தனக்கு மன ரீதியான தொல்லை கொடுத்ததால், இனி சாப்பாடு தண்ணீர் என எதுவும் எடுத்துக்கொள்ளாமல், சாக போவதாக நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.

“இதுதான் என் கடைசி வீடியோ.. இந்த முடிவுக்கு சீமான்தான் காரணம்..” - மீண்டும் வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பாலியல் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் தன்னுடன் நெருக்கமாக சீமான் இருந்ததாகவும், தன்னை அவர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு குடும்பம் ,நடத்தியதாகவும், பின்னால் தன்னை விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு தற்போது வாழ்ந்து வருவதாகவும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அதோடு சீமான் அவருடன் பிறந்தநாள் கொண்டாடும் வீடியோவையும், புகைப்படத்தையும் விஜய லட்சுமி வெளியிட்டார். இது சம்பவம் தற்போது வரை அரசியல் வட்டாரத்தில் சீமானுக்கு எதிரான நிலைப்பாட்டை வகுத்துள்ளது. இவர் சீமான் மீது வைத்த குற்றச்சாட்டுக்கு சீமானின் ஆதரவாளர்கள் விஜய லட்சுமியை மிக மோசமாக வசைபாடி வந்தனர். மேலும் சீமானுக்கு ஆதரவாக ஹரி நாடார் தன்னை சாதி ரீதியிலும், தனிமனித ரீதியிலும் புண்படுத்தும்படி பேசியதாக குற்றஞ்சாட்டி வீடியோ ஒன்றினையும் வெளியிட்டார் நடிகை விஜயலட்சுமி.

“இதுதான் என் கடைசி வீடியோ.. இந்த முடிவுக்கு சீமான்தான் காரணம்..” - மீண்டும் வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி!

தொடர்ந்து சீமான் குறித்த வீடியோ வெளியிட்டு வந்த விஜயலட்சுமி, ஒருமுறை சீமானும், ஹரி நாடாரும் என்று குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டு தான் காரணம் என்று கூறி, தற்கொலை செய்ய முயன்று பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சீமான் மீது முன்பே புகார் கொடுத்து, பின்னர் வாபஸ் பெற்ற நடிகை விஜயலட்சுமி, அதன்பிறகு அவர் குறித்த விஷயங்களை வீடியோவாக மட்டுமே வெளியிட்டு வந்தார்.

இந்த சூழலில், 12 ஆண்டுகளுக்கு பிறகு அண்மையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது பாலியல் புகார் அளித்தார் விஜயலட்சுமி. அதோடு சீமானால் தான் 7 முறை கர்ப்பமானதாகவும், ஆனால், தனது அனுமதியின்றி, மாத்திரை மூலம் தனக்கு கருச்சிதைவு செய்ததாகவும் சீமான் மீது குற்றம்சாட்டினார். இது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்காக இவருக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு, சீமான் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

“இதுதான் என் கடைசி வீடியோ.. இந்த முடிவுக்கு சீமான்தான் காரணம்..” - மீண்டும் வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி!

ஆனால் சீமான் ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், கடந்த வாரம் அவர் மீதான வழக்கை திடீரென விஜயலட்சுமி வாபஸ் பெற்றார். மேலும் சீமானை திடீரென புகழ்ந்தும் பேசினார். இதையடுத்து 2 நாள் கழித்து மீண்டும், சீமான் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், ரூ.50 ஆயிரம் பணத்தை தரவில்லை என்று மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டார்.

இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு வீடியோ வெளியிட்டு, இது தான் தனது கடைசி வீடியோ என்றும், தானும், தனது சகோதரியும் சாக போவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோவில், "இதுதான் எனது கடைசி வீடியோ. எனது இந்த முடிவுக்கு சீமான் தான் காரணம். சீமானும் நாம் தமிழர் கட்சியினரும் எனக்கு கொடுத்த தொல்லைகள் தான் காரணம். இனி நானும் எனது அக்காவும் சாப்பாடு தண்ணீர் என எதுவும் சாப்பிட மாட்டோம். நாங்கள் இருவரும் சாக போகிறோம். சீமான் என்னை தகாத வார்த்தைகளால் பேசியதே இதற்கு காரணம்.

“இதுதான் என் கடைசி வீடியோ.. இந்த முடிவுக்கு சீமான்தான் காரணம்..” - மீண்டும் வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி!

2011-ல் நான் புகார் கொடுத்தபோதும், சீமானும், அவரது கட்சியினரும் தொல்லை கொடுத்து இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் செய்தார். தற்போது மீண்டும் புகார் கொடுத்தபோதும், இதே போல் என்னை மிரட்டி வருகின்றனர். என்னை யார் வாழ விட மாட்டர். அதனால்தான் இந்த முடிவு எடுத்துள்ளேன். எங்களது சாவுக்கு சீமான் தான் காரணம்.

என்னை அவமான படுத்தி, மன ரீதியான உளைச்சலை கொடுத்துள்ளார் சீமான். சீமானை கைது செய்யுங்கள். நான் இறப்பதே சீமானின் எண்ணம். இப்போது கூட என்னை அவர்கள் தொல்லை கொடுத்து வருகின்றனர். சீமானை கைது செய்யுங்கள். இது தான் எனது கடைசி வீடியோ" என்றுள்ளார். இதனால் தற்போது மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீமான் மீது புகார் அளித்த பிறகு, 2009-ல் ஈழத்தில் போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, சீமான் தன்னுடன் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்ததாக விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories