தமிழ்நாடு

“இந்தியா கூட்டணியின் முன்மாதிரி திமுக கூட்டணிதான்.. இதுதான் எங்கள் வியூகம்” : பிரகாஷ் காரத் பேச்சு!

திமுக தலைமையிலான தமிழகத்தில் உள்ள வலுவான கூட்டணி தான் பாஜகவை வீழ்த்துவதற்கான முன்மாதிரி வழிகாட்டியாக உள்ளது என பிரகாஷ் கார்த் தெரிவித்துள்ளார்.

“இந்தியா கூட்டணியின் முன்மாதிரி திமுக கூட்டணிதான்.. இதுதான் எங்கள் வியூகம்” : பிரகாஷ் காரத் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நெல்லை பாளையங்கோட்டையில் தீக்கதிர் நாளேட்டின் நெல்லை பதிப்பு தொடக்க விழா நிகழ்ச்சி தீக்கதிர் சிறப்பாசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் ஆலோசனை தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசுகையில், கடந்த 9 ஆண்டு காலமாக மத்தியில் மோடி ஆட்சி நடந்து வருகிறது.

மோடி ஆட்சியில் ஊடக சுதந்திரத்தின் மீதும் ஜனநாயக விழுமியங்கள் மீதும் மிக கடுமையான தாக்குதல்கள் நடந்துள்ளது. ஒட்டுமொத்த ஊடகத்தையும் கார்பரேட் கைக்குள் கொண்டு வந்துள்ளது இந்த மோடி அரசு.உலகத்தில் ஐந்தாவது பெரிய நாடாக இந்தியா உள்ளதாகவும் விரைவில் மூன்றாவது பெரிய நாடாக மாற இருப்பதாகவும் மோடி தெரிவித்து வருகிறார்.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை ஜி 20 மாநாட்டில் கலந்து கொண்ட நாடுகளின் கடைசி நாடாக இந்தியா பொருளாதாரத்தில் உள்ளது. அதுதான் உண்மை நிலை, வேலையின்மை, விவசாயத்தை பாதிக்கும் திட்டம், விலைவாசி உயர்வு போன்ற மோசமான கொள்கைகளை பாஜக அரசு அமல்படுத்தி வருகிறதே தவிர வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

“இந்தியா கூட்டணியின் முன்மாதிரி திமுக கூட்டணிதான்.. இதுதான் எங்கள் வியூகம்” : பிரகாஷ் காரத் பேச்சு!

ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் ஒட்டுமொத்த நாட்டின் வளத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சூறையாடி வருகிறது. இந்த நிலையில் நாடு வளர்ச்சி அடைந்ததாக மோடி சொல்வது கார்ப்பரேட்டின் வளர்ச்சியை குறிக்கிறது. மோடி அரசு அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தினால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சட்டமன்றங்களின் உரிமைகளை பறிக்கும் செயலாகும், ஒட்டுமொத்த அதிகாரத்தையும் அவர்கள் கையில் கொண்டு வந்து ஒற்றை ஆட்சி முறையை கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்கிறது.

மோடி அரசிற்கான மக்கள் ஆதரவு தற்போது குறைந்து வருகிறது வருகிற ஐந்து மாநில தேர்தலிலும் தோல்வியை தழுவம் நிலையில்தான் பாஜக உள்ளது. 2019 காங்கிரஸ் கொண்டு வந்த மகளிர் காண 33 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவை பாஜக தற்போது திருத்தி அமைத்து பல நிபந்தனைகளை விதித்து நிறைவேற்றி உள்ளது. தேர்தலுக்காக தான் தற்போது இந்த மசோதாவை பாஜக கொண்டு வந்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு அதன் பின் சட்டமன்ற தொகுதி மறு வரை என அனைத்தும் நிறைவு செய்த பிறகு 2034 ஆம் ஆண்டுதான் 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா அமலுக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இன்னும் 15 ஆண்டுகாலம் மகளிர் அனைவரும் இந்த மசோதாவின் உரிமைகளை பெற காத்திருக்கும் நிலையில் தான் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது இது ஒரு கண்துடைப்பு நாடகம். எதிர்வரும் நாட்களில் பாஜக ஆட்சிக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் பல்வேறு கூட்டங்கள் நடத்தி ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

“இந்தியா கூட்டணியின் முன்மாதிரி திமுக கூட்டணிதான்.. இதுதான் எங்கள் வியூகம்” : பிரகாஷ் காரத் பேச்சு!

2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாரதியஜனதா கட்சியை தனிமைப்படுத்தி வீழ்த்துவது இந்தியா கூட்டணியின் இலக்கு. தமிழகத்தில் திமுக தலைமையிலான வலுவான அணி பாஜகவை வீழ்த்த எப்படி அமைந்துள்ளதோ அதேபோன்று ஒன்றுபட்ட தேசிய கூட்டணியாக இந்திய அணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணி 28 கட்சிகளை ஒன்றிணைத்து மிக பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்தியக் கூட்டணியின் உருவாக்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிக முக்கிய பங்கை செலுத்தியுள்ளது.

திமுக தலைமையிலான தமிழகத்தில் உள்ள வலுவான கூட்டணி தான் பாஜகவை வீழ்த்துவதற்கான முன்மாதிரி வழிகாட்டியாக உள்ளது. ஆர்.ஸ்.எஸ்-ம் பாஜகவும் இந்து ராஷ்ட்ரியத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனை எதிர்த்து மிகப்பெரிய போராட்டத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories