தமிழ்நாடு

”அடிமைகளின் எஜமானர்களை விரட்டி அடிப்போம்".. முப்பெரும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேச்சு!

"அடிமைகளின் எஜமானர்களை விரட்டி அடிப்போம்" என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

”அடிமைகளின் எஜமானர்களை விரட்டி அடிப்போம்".. முப்பெரும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் தி.மு.க. பவள விழா கழகப்பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டாவில் நடைபெற்று வருகிறது.

இந்த முப்பெரும் விழாவில், மயிலாடுதுறை கி.சத்தியசீலன் அவர்களுக்குப் பெரியார் விருது, மீஞ்சூர் க. சுந்தரம் அவர்களுக்கு அண்ணா விருது,அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களுக்குக் கலைஞர் விருது, தென்காசி மலிகா கதிரவன் அவர்களுக்குப் பாவேந்தர் விருது, பெங்களூர் ந.இராமசாமி அவர்களுக்குப் பேராசிரியர் விருதுகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார்.

மேலும் மூத்தமுன்னோடுகளுக்கு பொற்கிழிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். முன்னதாக இந்த முப்பெரும் விழாவில் மக்களுடன் ஸ்டாலின் என்ற செலியை வெளியிட்டார்.

”அடிமைகளின் எஜமானர்களை விரட்டி அடிப்போம்".. முப்பெரும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேச்சு!

பின்னர் விருது பெற்றவர்கள் சார்பாக அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “எங்களை அடையாளம் கண்ட இயக்கம் தி.மு.கதான். எங்களின் பின்புலம் தி.மு.க மட்டுமே. கல்லூரி படிப்பை முடித்ததுமே முத்தமிழறிஞர் கலைஞர் மீது இருந்த பற்றால் கழகத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றேன். தளபதி மு.க.ஸ்டாலின் நடத்தும் பேரில் சிப்பாயாக முதல் வரிசையில் நானே இருப்பேன். என் உயிர் மூச்சு இருக்கும் வரை தி.மு.கழகத்திற்காக உழைப்பேன்”என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தி.மு.கழகத்தை எந்தக் கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் அடிமைகளை வீட்டிற்கு அனுப்பினோம். அதேபோல், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை விரட்டி அடிப்போம்" என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories