தமிழ்நாடு

"உப்பு சப்பு இல்லாத சனாதனத்தை கையில் எடுத்து உளறி வரும் அண்ணாமலை"... அமைச்சர் சேகர்பாபு பதிலடி!

உப்பு சப்பு இல்லாத சனாதனத்தை கையில் எடுத்து அண்ணாமலை உலறி வருகிறார் என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

"உப்பு சப்பு இல்லாத சனாதனத்தை கையில் எடுத்து உளறி வரும் அண்ணாமலை"... அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை அமைச்சர் சேகர்பாபு சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "ஆகமவிதிப்படி நீண்டநாட்களாக நிலுவையில் உள்ள திருக்கோவில்கள் மற்றும் 12 ஆண்டுகள் நிறைவுபெற்ற திருக்கோவில்கள் ஆகியவற்றிற்கு ஆகமவிதிப்படி குடமுழுக்கு விழா நடத்த வேண்டும் என்று முதலமைச்சரின் உத்தரவுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக 400 ஆண்டுகளுக்குப் பிறகு திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு இந்த ஆட்சியில் தான் குடமுழுக்கு விழா நடைபெற்றது. கோட்டை மாரியம்மன் திருக்கோயில் அடுத்த மாதம் 27ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.

தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இந்து சமயத்துறை வரலாற்றில் எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்குப் பெரிய மாற்றத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கிக் காட்டியுள்ளார்.

"உப்பு சப்பு இல்லாத சனாதனத்தை கையில் எடுத்து உளறி வரும் அண்ணாமலை"... அமைச்சர் சேகர்பாபு பதிலடி!

தி.மு.க ஆட்சி பற்றிக் குறைசொல்வதற்கு எதுவும் கிடைக்காததால் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வரலாறுகள் தெரியாமல் உளறி வருகிறார். ஏதாவது ஒரு பிரச்சனை கையில் எடுக்கவேண்டும் என்பதற்காக உப்பு சப்பு இல்லாத சனாதனத்தைக் கையில் எடுத்துள்ளார் அண்ணாமலை. தி.மு.க எப்போதும் சமத்துவத்தை வலியுறுத்தி வருகிறது. சமத்துவத்தை வலியுறுத்துகின்ற கடமை தி.மு.கவிற்கு உண்டு.

சனாதனம் வலியுறுத்தும், இறந்தவுடன் உடன்கட்டை ஏறுதல், குலக்கல்வி, மக்களிடையே உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற பாகுபாட்டைப் போதிக்கும் சனாதன கோட்பாடுகளைத்தான் நாங்கள் எதிர்கிறோம். சமத்துவத்தின் ஒரு அங்கம் தான் தி.மு.க என்பதை அண்ணாமலை போன்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories