தமிழ்நாடு

“போலிசாரின் காக்கியை காவியாக மாற்றுவோம்..” - பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சர்ச்சை பேச்சு !

“தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாடு போலீசாரின் காக்கி சீருடைக்கு பதில் காவி சீருடை வழங்குவோம்” என பாஜக மூத்தத் தலைவர் எச்.ராஜா பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“போலிசாரின் காக்கியை காவியாக மாற்றுவோம்..” - பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சர்ச்சை பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே மக்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் பல்வேறு விஷயங்களை மாற்றி காவிமயமாக்கி வருகிறது பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பல். அதோடு இந்தியாவை ஒரு இந்துராஷ்டிர நாடாகவும் மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அதன்படி இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையினர் பலரும் பாஜக கும்பலால் கடும் தாக்குதலுக்கும், அடுக்குமுறைக்கும் உள்ளாக்க படுகின்றனர். மேலும் இந்தியா ஒரு இந்து நாடு என்றும், இது இந்துக்களுக்கு தான் என்றும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பல் பேசி வருகிறது. இந்தியாவில் இருக்கும் வெளிநாடு சின்னங்களையும், அடையாளங்களையும் அழித்து வருகிறது.

“போலிசாரின் காக்கியை காவியாக மாற்றுவோம்..” - பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சர்ச்சை பேச்சு !

அது மட்டுமின்றி சனாதனம், குழந்தை திருமணம் உள்ளிட்டவைகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. தற்போதும் கூட சனாதனத்தை பறைசாற்றும் விதமாக பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா என்ற குலத்தொழிலை ஊக்குவிக்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் தங்கள் குலத்தொழிலை ஒருவருக்கு கடனுதவி அரசால் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, செருப்பு, முடிதிருத்தம், மண் பாண்டம், தச்சர், சலவை உள்ளிட்ட 18 வகையிலான பரம்பரைத் தொழில்கள் செய்பவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு நாட்டையும், நாட்டு மக்களையும் துன்பப்படுத்தி வருகிறது பாஜக.

“போலிசாரின் காக்கியை காவியாக மாற்றுவோம்..” - பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சர்ச்சை பேச்சு !

இந்த நிலையில், தற்போது தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாடு போலீசாரின் காக்கி சீருடை மாற்றப்படும் என்று தெரிவித்தார். மேலும் போலீசார் தற்போது அணிந்து வரும் காக்கி சீருடைக்கு பதிலாக காவி நிறத்தில் சீருடை வழங்குவதாகவும் தெரிவித்தார். இவரது பேச்சு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“போலிசாரின் காக்கியை காவியாக மாற்றுவோம்..” - பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சர்ச்சை பேச்சு !

ஏற்கனவே நாடாளுமன்ற காவலர்களுக்கும், அலுவலர்களுக்கும் அறிமுகப் படுத்தப்பட்ட புதிய சீருடைகளில் தாமரை மலர் பொறிக்கப்பட்ட சம்பவம் பெரும் சலசலப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இவரது பேச்சு கண்டனங்களை எழுப்பி வருகிறது.

நாடாளுமன்ற பணியாளர்கள் உடுக்கும் தற்போதைய சபாரி உடைகளுக்குப் பதிலாக ஆண் பணியாளர்களுக்கு குர்தா, பைஜாமாவும், பெண் பணியாளர்களுக்கு புடவையும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. இதனை தேசிய ஆடைவடிவமைப்பு கல்வி நிறுனமான நிப்ட் வடிவமைத்துள்ளது. புதிய சீருடைகளில் தாமரை மலர் இடம் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நாடாளுமன்றம் கூடும் போது இந்த சீருடை பிரச்னை சர்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories