தமிழ்நாடு

ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. சிக்கிய சசிகலா மற்றும் இளவரசி!

சசிகலா மற்றும் இளவரசிக்கு பெங்களூரு லோக் ஆயுக்தா நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவிட்டுள்ளது.

ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. சிக்கிய சசிகலா மற்றும் இளவரசி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அப்போது சிறையில் சொகுசு வாழ்க்கை அனுபவிப்பதற்காக அங்குள்ள அதிகாரிகளுக்கு ரூ. 2 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சசிகலா மற்றும் இளவரசி உட்பட சிறைத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. சிக்கிய சசிகலா மற்றும் இளவரசி!

இந்த வழக்கு பெங்களூரில் உள்ள ஊழல் தடுப்பு பிரிவு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. வழக்கில் தொடர்புடைய குற்றம் சாட்டப்பட்ட சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதால் அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

இதே போல ஏற்கனவே இந்த வழக்கில் இருவருக்கும் ஜாமீன் வழங்கிய நபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories