தமிழ்நாடு

16 பேர்.. 2 கார்கள்.. ஆந்திராவில் 228 கிலோ கஞ்சா கடத்தல்: பாஜக, பாமக நிர்வாகிகள் கைது - காவல்துறை அதிரடி!

ஆந்திராவில் 228 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி, பாமக இளைஞர் அணி நிர்வாகி 2 பெண்கள் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

16 பேர்.. 2 கார்கள்.. ஆந்திராவில் 228 கிலோ கஞ்சா கடத்தல்: பாஜக, பாமக நிர்வாகிகள் கைது - காவல்துறை அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தூத்துக்குடி மாநகரில் வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து கல்லூரி, மாணவர்கள் இளைஞர்கள் மீனவர்கள் ஆகியோரை குறி வைத்தும், இலங்கைக்கு படகு மூலம் கஞ்சாவை கடத்தி கஞ்சாவை விற்பனை செய்து கொல்லை லாபம் சம்பாதிப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், கடந்த 27 ஆம் தேதி புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் பகுதியில், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னை என்னுள்ள இரண்டு இன்னோவா சொகுசு கார்களை காவல்துறையினர் மடக்கி சோதனை செய்தனர். இதில், காரில் இருந்த 228 கிலோ கஞ்சா மற்றும் 16 பேரை கைது செய்து, மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி சிவசுப்பு தலைமையில் இரண்டு நாட்களாக விசாரணை நடத்தினர்.

16 பேர்.. 2 கார்கள்.. ஆந்திராவில் 228 கிலோ கஞ்சா கடத்தல்: பாஜக, பாமக நிர்வாகிகள் கைது - காவல்துறை அதிரடி!

இந்த விசாரணையில், கஞ்சா கடத்தல் தொடர்பாக ஆரோன்,இசக்கி கணேஷ் சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப், தூத்துக்குடிபாமக மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜா, சஜன் ரெணி, திருமேனி குமரன், அருண்குமார், தயாளன், சாத்தான்குளம் ஒன்றிய பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் மணிகண்டன், காளீஸ்வரன்,விக்னேஸ்வரன், சம்பத்குமார், சரவணன் மற்றும் சட்டக் கல்லூரி மாணவியும் ஆரோனின் மனைவி சிபானியா, ஸ்ரீமதி ஆகிய இரண்டு பெண்கள் உள்ளிட்ட 16 பேரை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் நடுவர் இரண்டில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இந்த கும்பல் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சாவை பல நாட்களாக சொகுசு காரில் கடத்தி இலங்கைக்கு படகுமூலம் விற்பனை செய்திருப்பது தெரிய வந்தது.

16 பேர்.. 2 கார்கள்.. ஆந்திராவில் 228 கிலோ கஞ்சா கடத்தல்: பாஜக, பாமக நிர்வாகிகள் கைது - காவல்துறை அதிரடி!

இதற்காக முக்கிய குற்றவாளியான ஆரோன் தனது மனைவியும் சட்டக் கல்லூரி மாணவி திவானியா மற்றும் ஸ்ரீமதி ஆகிய இரண்டு பெண்களை இந்த கும்பல் பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது. மேலும் இந்த கும்பலுடன் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து அவர்களது செல்போனை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கும்பல் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு இன்னோவா கார்கள் மற்றும் இருசக்கர வாகனத்தின் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடியில் கஞ்சா கடத்தலில் அரசியல் கட்சி பிரமுகர்கள் பெண்கள் மற்றும் சென்னை கடலூர் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த கஞ்சா கடத்தல் கும்பல் சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

banner

Related Stories

Related Stories