தமிழ்நாடு

காவிரி விவகாரம்.. "மெத்தனமாக செயல்படும் காவிரி மேலாண்மை ஆணையம்".. அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு!

நீர் பங்கீட்டு விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனமாகச் செயல்படுவதாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரி விவகாரம்.. "மெத்தனமாக செயல்படும் காவிரி மேலாண்மை ஆணையம்".. அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா காணொளி காட்சியில் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனமாகச் செயல்படுவதாகத் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், "நேற்று நடந்த காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி பயிர்களைக் காப்பாற்ற விநாடிக்கு 24000 கன அடி நீர் வீதம் 10 நாட்களுக்குத் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

காவிரி விவகாரம்.. "மெத்தனமாக செயல்படும் காவிரி மேலாண்மை ஆணையம்".. அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு!

கர்நாடக அரசு 5000 கன அடி நீர் திறப்பதாகவும், காவிரி ஒழுங்கு முறை ஆணையம் 7000 கன அடி நீர் திறக்க பரிந்துரை செய்துள்ளது. காவிரி நீர் அதிகம் இருக்கும் போது எவ்வாறு பங்கீடு செய்ய வேண்டும் என்ற வரைமுறை உள்ளது. ஆனால் நீர் தட்டுப்பாடு உள்ள நேரத்தில் நீரை எவ்வாறு பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்ற வரையறை இல்லை. இந்த விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனமாகச் செயல்படுகிறது. இதனையும் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வலுவாக எடுத்து வைக்கும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories