தமிழ்நாடு

மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு 5 வருடம் கழித்து டெண்டர்.. வெளிச்சத்திற்கு வந்த ஒன்றிய அரசின் நாடகம்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு 5 வருடம் கழித்து ஒன்றிய அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு 5 வருடம் கழித்து டெண்டர்.. வெளிச்சத்திற்கு வந்த ஒன்றிய அரசின் நாடகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க 2018ம் ஆண்டு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து 2019ம் ஆண்டு எஸ்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்குப் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

அந்த ஒற்றை செங்கல்லை தவிர வேறு எந்த பணியையும் ஒன்றிய அரசு இதுவரை தொடங்காமல் உள்ளது. மேலும் இந்த ஒற்றை செங்கல்லுக்காக மட்டும் சுற்றுச்சுவறை அமைத்துள்ளது. இந்த இரண்டு வேலைகளைத் தவிர வேறு எந்த கட்டுமான பணிகளையும் ஒன்றிய அரசு தொடங்காமல் இருந்துவருகிறது.

மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு 5 வருடம் கழித்து டெண்டர்.. வெளிச்சத்திற்கு வந்த ஒன்றிய அரசின் நாடகம்!

இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் ஒன்றிய அரசு எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்து வருகிறது. சட்டமன்ற தேர்தலின் போது கூட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தின் முக்கியமானதாக இருந்தது ஒற்றை செங்கல் தான்.

2022ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த ஜே.பி. நட்டா மதுரை எய்ம்ஸ் பணிகள் 95% முடிந்து விட்டதாகக் கூறியது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 95% வேலை முடிந்த எய்ம்ஸ் எங்கே? என அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கேள்வி எழுப்பினர்.

மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு 5 வருடம் கழித்து டெண்டர்.. வெளிச்சத்திற்கு வந்த ஒன்றிய அரசின் நாடகம்!

தற்போது நடந்து முடிந்த நாடாளுமுன்ற கூட்டத் தொடரில் ஒன்றிய நிதியமைச்சர் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தாமதமாவதற்குத் தமிழ்நாடு அரசுதான் காரணம் என தங்களது தவறை மறைக்கப் பார்த்தார். ஆனால் தி.மு.க எம்.பிக்கள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் 5 வருடங்கள் கழித்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இது ஒன்றிய அரசு இந்நாள்வரை பேசி வந்த பொய்யை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. மேலும் இந்த டெண்டர் திடீரென கோரியுள்ளது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காகவா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories