தமிழ்நாடு

டிச.09,10 - சென்னையில் ஃபார்முலா ரேஸிங் போட்டி.. Street ஓடுதளத்தை அறிமுகம் செய்த அமைச்சர் உதயநிதி !

சென்னையில் வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள ஃபார்முலா ரேஸிங் எனப்படும் கார் பந்தயம் போட்டிக்கான ஓடுதளத்தை (Formula Racing Circuit) அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

டிச.09,10 - சென்னையில் ஃபார்முலா ரேஸிங் போட்டி.. Street ஓடுதளத்தை அறிமுகம் செய்த  அமைச்சர் உதயநிதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னையில் வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள ஃபார்முலா ரேஸிங் எனப்படும் கார் பந்தயம் போட்டிக்கான ஓடுதளத்தை (Formula Racing Circuit) அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸில் நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறை செயலாளர் - கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் Racing Promotions Private Limited, ஃபெடரேசன் ஆப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்ஸ் ஆப் இந்தியா (Federation of Motor Sports Clubs of India) நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமானது சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர சென்னை வளர்ச்சிக் குழுமத்தை ஒருங்கிணைத்து Racing Promotions Private Limited உடன் இணைந்து நடத்தும் இந்த ஃபார்முலா 4 போட்டியானது வரும் டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

டிச.09,10 - சென்னையில் ஃபார்முலா ரேஸிங் போட்டி.. Street ஓடுதளத்தை அறிமுகம் செய்த  அமைச்சர் உதயநிதி !

இதற்கான ஓடுதளம் சென்னையில் தீவுத்திடலையொட்டியகொடி மரச்சாலையில் தொடங்கி ஓமந்தூரார் அரசினர் தோட்டம் வரையிலான அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவுச் சின்னம் ஆகியவற்றை உள்ளடக்கிய 3.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக அமைகிறது. இதுதான் இந்தியாவிலேயே அதிக தொலைவு கொண்ட Street circuit எனப்படும் பொதுப்போக்குவரத்துக்கான சாலையை பயன்படுத்தும் ஃபார்முலா 4 ஓடுதளமாகவும் அமைய உள்ளது.

போட்டிகள் அனைத்தும் இரவு நேரத்தில் நடைபெற உள்ளன. இதுகுறித்து Racing Promotions Private Limited, ஃபெடரேசன் ஆப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்ஸ் ஆப் இந்தியா ஆகியோர் விவரித்தனர்.

போட்டிக்கான ஓடுதளம் குறித்த வரைபடம் உள்ளிட்ட விவரங்களை விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி விளக்கினார். நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , "இந்தியாவின் டெட்ராய்ட் என்ற புகழை கொண்டுள்ள சென்னைக்கும் மோட்டார் ஸ்போர்ட்ஸ்களுக்கும் நீண்டகால தொடர்பு உண்டு. நமது அரசின் முயற்சிகளால் பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகள் அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகின்றன.

டிச.09,10 - சென்னையில் ஃபார்முலா ரேஸிங் போட்டி.. Street ஓடுதளத்தை அறிமுகம் செய்த  அமைச்சர் உதயநிதி !

அண்மையில் ஏசியன் ஹாக்கி போட்டி நடத்தப்பட்டது. தற்போது அலைசறுக்கு போட்டிகள் நடந்து வருகின்றன. இன்னும் சில போட்டிகள் நடத்தப்பட உள்ளன. சர்வதேச தரத்தில் விளையாட்டு நகரம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

2024ல் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த உள்ளோம். இப்படியான சூழலில் சென்னையில் நடத்தப்பட உள்ள ஃபார்முலா 4 போட்டிகள் தமிழ்நாட்டில் இருந்து புதிய திறமையாளர்கள் உருவாக வழிவகுக்கும் என நம்புகிறேன்" என்றார். இறுதியாக போட்டிக்கான இலச்சினையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் Racing Promotions Private Limited இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.

banner

Related Stories

Related Stories