தமிழ்நாடு

“ஜெயலலிதா விவகாரம் : கட்டுக்கதையை படித்து விட்டு பேசுகிறார் நிர்மலா சீதாராமன்” - முதலமைச்சர் கண்டனம் !

நிர்மலா சீதாராமன் ஏதாவது வாட்ஸ் அப் வரலாற்றைப் படித்து விட்டுப் பேசுவார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“ஜெயலலிதா விவகாரம் : கட்டுக்கதையை படித்து விட்டு பேசுகிறார் நிர்மலா சீதாராமன்” - முதலமைச்சர் கண்டனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நேற்றுடன் முடிவடைந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1989-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெயலலிதா அவமதிக்கப்பட்டதாக நடக்காத ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டு பேசினார்.

இவரின் இந்த பொய்யான கருத்திற்கு அப்போதே அவையிலிருந்த தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். இருந்தும் அவர் தொடர்ந்து அந்த பொய் கதையைச் சொல்லிப் பேசிக் கொண்டே இருந்தார். இந்நிலையில், சட்டமன்றத்தில் நடந்ததாக கூறிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“ஜெயலலிதா விவகாரம் : கட்டுக்கதையை படித்து விட்டு பேசுகிறார் நிர்மலா சீதாராமன்” - முதலமைச்சர் கண்டனம் !

‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஆங்கில நாளேடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளது. அதில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசுகையில், 1989-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெயலலிதா அவர்களின் சேலை இழுக்கப்பட்டதாகக் கூறி, பெண்கள் பாதுகாப்பு தொடர்பாகத் தி.மு.க.வை நேரடியாகத் தாக்கிப் பேசியிருக்கிறார். உங்களது பதில் என்ன?

இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நிர்மலா சீதாராமன் ஏதாவது வாட்ஸ் அப் வரலாற்றைப் படித்து விட்டுப் பேசுவார். ஜெயலலிதாவுக்குத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. அது அவராக நடத்திக் கொண்ட நாடகம் என்பதை அப்போது அவையிலிருந்த அனைவரும் அறிவார்கள்.

இப்படி சட்டமன்றத்தில் செய்ய வேண்டும் என்று முன்னதாகவே தனது போயஸ் கார்டன் வீட்டில் வைத்து ஜெயலலிதா ஒத்திகை பார்த்தார் என்றும், அப்போது நான் உடனிருந்தேன் என்றும் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு அவர்கள் (இப்போதைய திருச்சி காங்கிரஸ் எம்.பி) சட்டமன்றத்திலேயே பேசி அதுவும் அவைக் குறிப்பில் உள்ளது.

எனவே தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வைப் பொய்யாகத் திரித்து நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கது, அவையைத் தவறாக வழிநடத்துவது." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories