தமிழ்நாடு

தோண்டத் தோண்ட பொக்கிஷம்.. அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள்!

காஞ்சிபுரம் மாவட்டம், துரும்பன்மேடு பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தோண்டத் தோண்ட பொக்கிஷம்.. அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வடக்குப்பட்டு கிராமத்திற்குட்பட்ட துரும்பன்மேடு பகுதியில் கடந்த ஆண்டு சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சுமார் 9 அடி உயரமுள்ள சிவலிங்கம் மண்ணில் புதைந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகே கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை வடக்கு மண்டல தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையிலான தொல்லியல் துறையினர் வடக்குப்பட்டு துரும்பன்மேடு பகுதியில் அகழாய்வு பணிகளைத் தொடங்கினர்.

இந்த அகழ்வாராய்ச்சி மூன்று மாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், பழங்கால கட்டட அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இது பல்லவர் கால கட்டடம் என்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்தது.

தோண்டத் தோண்ட பொக்கிஷம்.. அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள்!

இதையடுத்து அப்பகுதியில் கல் மணிகள், கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள், வண்ணம் பூசிய பானை ஓடுகள் மற்றும் குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள் மேலும் ரோமானியர் ஓடுகளும், தங்கத்தால் ஆன 2 அணிகலன்கள், கண்ணாடி அணிகலன்கள், சுடுமண் பொம்மைகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், வடக்குப்பட்டு துரும்பன்மேடு பகுதியில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த மே மாதம் தொடங்கியது.

ஆறு மாதங்கள் நடைபெற உள்ள இந்த 2ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில், சுடுமண் பொருட்கள், சோழர் கால செப்பு சிறியகுவளை, செம்பு மூடி, சுடுமண் பொம்மைகள், கல் மற்றும் கண்ணாடி மணிகள், செப்பு வளையங்கள், சோழர் காலத்து நாணயங்கள், சுடுமண் பொருட்கள், வட்ட சில்லுகள், வளையல் துண்டுகள் என சுமார் 400க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.

தோண்டத் தோண்ட பொக்கிஷம்.. அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள்!

இந்நிலையில், தமிழ் பிராமி எழுத்து பொறிப்புடன் கூடிய பானை ஓடு, கண்ணாடி மணி, கண்ணாடி வளையல், சுடுமண் பொம்மைகள், சூது பவள மணிகள், இரும்பு மற்றும் செம்பு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், "தமிழ் எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடு மிகவும் முக்கிய கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. இந்த பானை ஓட்டில் மத்தி என்று மூன்று எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. இதுவரை வடதமிழகத்தில் காஞ்சிபுரம், பட்டரைபெரும்புதூர் போன்ற இடங்களில் மட்டுமே தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன" என தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories