தமிழ்நாடு

உங்கள் மகன் எங்கே கிரிக்கெட் விளையாடினார்? : அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

உங்கள் மகன் எப்படி BCCI தலைவரானார் ? என ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

உங்கள் மகன் எங்கே கிரிக்கெட் விளையாடினார்? : அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க. இளைஞர் அணியில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட-மாநில-மாநகர அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் இன்று சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

தி.மு.க. இளைஞர் அணியின் செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்கள், துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா அவர்கள், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் எஸ்.ஜோயல், இன்பா என்கிற ரகு, நா.இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், பி.எஸ்.சீனிவாசன், க.பிரபு, ஜி.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "தி.மு.க இளைஞர் அணியின் புதிய ரத்தம் அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக நமது கழகம் தொடர்ந்து பணிகளை முன்னெடுத்து வருகிறது.

உங்கள் மகன் எங்கே கிரிக்கெட் விளையாடினார்? : அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்காக திமுக இளைஞர் அணியினர் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சிறிய நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, பெரிய நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி நமது பணிகளைச் சிறப்பாகச் செய்ய வேண்டும். நாட்டிற்கு விடிவுகாலம் ஏற்பட வேண்டும் என்றால் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றாக வேண்டும். இதற்கு இளைஞரணி உறுதுணையாக இருக்க வேண்டும்.

தி.மு.க ஆட்சியின் இரண்டு ஆண்டுகால சாதனைகளையும், திட்டங்களையும் அனைத்து மக்களிடத்திலும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும். நீங்கள் எடுத்துச் செல்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

உங்கள் மகன் எங்கே கிரிக்கெட் விளையாடினார்? : அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

நேற்று தமிழ்நாட்டிற்கு வந்துள்ள ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, என்னைப் பற்றிப் பேசியுள்ளார். நான் அவரிடம் கேட்கும் கேள்வி ஒன்றுதான். உங்களுடைய மகன் ஜெய் ஷா எப்படி BCCI தலைவரானார்?. அவர் எந்த கிரிக்கெட் மைதானத்தில் விளையாடினார்? எவ்வளவு ரன்கள் அடித்தார்?.

நான் மக்களை சந்தித்து சட்டமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற்று அமைச்சராக உள்ளேன். உங்கள் மகன் எந்த தகுதியை வைத்து பதவிக்கு வந்தார் என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா 2014 ஆண்டு ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். அப்போது அந்நிறுவனத்தின் மதிப்பு ரூ. 75 லட்சம் இருந்தது. ஆனால் இன்று அந்நிறுவனத்தின் மதிப்பு ரூ.130 கோடி. இந்த வளர்ச்சி எப்படி வந்தது? இதற்கு எல்லாம் பதில் சொல்வாரா அமித்ஷா" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories