தமிழ்நாடு

”இன்னும் 5 மாதத்தில் இதே ED உங்கள் மீதும் பாயும்”.. எச்சரிக்கை விடுத்த அமைச்சர் ரகுபதி!

ED வந்தாலும் சரி IT வந்தாலும் சரி தி.மு.கவினர் கவலைப்பட மாட்டார்கள் என அமைச்சர் ரகுபதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

”இன்னும் 5 மாதத்தில் இதே ED உங்கள் மீதும் பாயும்”.. எச்சரிக்கை விடுத்த அமைச்சர் ரகுபதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய அரசு எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் அம்மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. மேலும் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறைகளைக் கொண்டு எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் அமைச்சர்களை மிரட்டி வருகிறது.

தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெறுங்கிவிட்டதை அடுத்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பா.ஜ.கவை தோற்கடிக்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றுசேரவே முடியாது என பலரும் கூறிய நிலையில் முதல் இரண்டு கூட்டங்களை நடத்தி கூட்டணிக்கு என்று 'இந்தியா' என பெயர் வைத்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளனர்.

இது பா.ஜ.கவிற்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த கூட்டணியை உடைக்க பல்வேறு சதித் திட்டங்களைக் கையில் எடுத்துள்ளது. இதில் குறிப்பாக அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையைக் கொண்டு சோதனை என்ற பெயரில் எதிர்க்கட்சிகளை முடக்கப் பார்க்கிறது.

”இன்னும் 5 மாதத்தில் இதே ED உங்கள் மீதும் பாயும்”.. எச்சரிக்கை விடுத்த அமைச்சர் ரகுபதி!

குறிப்பாக இந்த கூட்டணி அமைக்க முக்கிய பாலமாக இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சரை அச்சுறுத்தும் வகையில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த சோதனைகளுக்கு எல்லாம் தி.மு.க என்றும் அஞ்சியது கிடையாது என திட்ட வட்டமாகத் தெரிவித்து விட்டார்.

இந்நிலையில், ED வந்தாலும் சரி IT வந்தாலும் சரி தி.மு.கவினர் கவலைப்பட மாட்டார்கள் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், நடந்த கலைஞரின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார் அமைச்சர் ரகுபதி.

அப்போது பேசிய அவர், " ED வந்தாலும் சரி IT வந்தாலும் சரி தி.மு.கவினர் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். இன்னும் ஐந்து மாதத்தில் இதே ED உங்கள் மீதும் பாயும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories