தமிழ்நாடு

ரூ.20,000 வாடகை வீடு எடுத்து ரூ.11 லட்சத்திற்கு குத்தகை விட்டு மோசடி.. விதவிதமாய் ஏமாற்றிய BJP நிர்வாகி!

சென்னையில் வீட்டை வாடகைக்கு அடுத்து குத்தகைக்கு விட்டு பண மோசடி செய்து வந்த பா.ஜ.க நிர்வாகியை போலிஸார் கைது செய்துள்ளனர்.

ரூ.20,000 வாடகை வீடு எடுத்து ரூ.11 லட்சத்திற்கு குத்தகை விட்டு மோசடி.. விதவிதமாய் ஏமாற்றிய BJP நிர்வாகி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் பவானி என்ற 52 வயது முதிய பெண்மணிக்குச் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை ரூ.20 ஆயிரத்திற்கு பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி சிவா அரவிந்தன் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

ஆனால் சிவா அரவிந்தன் இந்த வீட்டை ரூ.11 லட்சத்திற்கு வேறு ஒருவருக்குக் குத்தகைக்கு விட்டுள்ளார். இதுபற்றி தெரிந்த பவானி அவரிடம் முறையிட்டபோது அவரை மிரட்டியுள்ளார். பின்னர் இது குறித்து விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் பவானி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து சிவா அரவிந்தனைக் கைது செய்தனர்.

ரூ.20,000 வாடகை வீடு எடுத்து ரூ.11 லட்சத்திற்கு குத்தகை விட்டு மோசடி.. விதவிதமாய் ஏமாற்றிய BJP நிர்வாகி!

அவரிடம் நடத்திய விசாரணையில் இதேபோன்று பலரிடம் மோசடி செய்ததும் தெரியவந்தது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராஜேந்திரன் என்பவரிடம் வீடு வாடகைக்கு எடுத்து, ரூ. 7 லட்சத்திற்குக் குத்தகை விட்டு மோசடி செய்துள்ளார்.

அதேபோன்று, அடையாற்றில் லீனா பெர்னாண்டஸ் என்பவரது வீட்டை வாடகைக்கு எடுத்து இரண்டு கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இந்த புகாரில் ஏற்கனவே சிவா அரவிந்தன் 2021ம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏ ஜி பிராப்பர்டி மேனேஜ்மெண்ட் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி இந்த மோசடியை நடத்தி வந்துள்ளார்.

ரூ.20,000 வாடகை வீடு எடுத்து ரூ.11 லட்சத்திற்கு குத்தகை விட்டு மோசடி.. விதவிதமாய் ஏமாற்றிய BJP நிர்வாகி!

இந்நிலையில் வீடு வாடகைக்கு எடுத்து, குத்தகைக்கு விட்டு மோசடி செய்யும் பாஜக நிர்வாகி சிவா அரவிந்தன் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் பா.ஜ.கவில் மாநில அளவில் பதவி வாங்கி தருவதாக நாகராஜ் என்பவரிடம் ரூ.16.60 லட்சம் பணமும், ராதாகிருஷ்ணன் என்பவரிடம் ரூ.55 லட்சமும், மாதவன் என்பவனிடம் ரூ.1.50 ஆயிரம் என மொத்தம் ரூ. 86 லட்சம் மோசடி செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories